ஜனவரின்னாங்க, பிப்ரவரின்னாங்க... இப்ப ஏப்ரலுக்கு போகுதாம் அனுஷ்கா படத்தின் ரிலீஸ்
சென்னை: அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள நிசப்தம் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்தார்.
இடையில் அவர் உடல் எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அமெரிக்கா சென்றுவந்ததாகவும் கூறப்பட்டது.

மாதவன்
அவரது உடல் எடை கூடிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அவர் நடித்த படம்தான், நிசப்தம். இதில் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார். மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

4 மொழிகளில்
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்காவின் லுக் கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் மாதவன் லுக் அக்டோபர் மாதமும் வெளியாயின. இதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். அதில் ஒல்லியான தோற்றத்தில் இருந்தார் அனுஷ்கா.

ஜனவரி 31 ஆம் தேதி
அந்த போஸ்டரைப் பகிர்ந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் அப்போது ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஏப்ரல் மாதம் ரிலீஸ்
இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. இதற்கிடையே அந்த தேதியிலும் படம் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











