அப்படி இருந்த அனுஷ்காவா இப்படி ஆகிவிட்டார்: வைரல் புகைப்படங்கள்
Recommended Video
சென்னை: நடிகை அனுஷ்காவின் பழைய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
யோகா மாஸ்டரான அனுஷ்கா நடிகையானார். நடிக்க வந்த உடனேயே அவர் பெரிய ஆளாகிவிடவில்லை. கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். தற்போது ஹீரோக்களுக்கு இணையான இமேஜ் அனுஷ்காவுக்கும் உள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்றால் தெலுங்கு திரையுலகில் முதலில் அனுஷ்காவை தான் அழைக்கிறார்கள்.

அனுஷ்கா
கதாபாத்திரமாகவே மாற நினைத்து இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக கூட்டினார் அனுஷ்கா. பாவம் அதன் பிறகு எடையை குறைக்க முடியாமல் அல்லாடினார். இதையடுத்து அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று எடையை குறைத்துவிட்டு வந்தார்.

வைரல்
அனுஷ்கா நடிக்க வந்த புதிதில் நடந்த போட்டோஷூட்டின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. அதை பார்ப்பவர்கள் அப்படி இருந்த அனுஷ்காவா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கிறார்கள்.

நடிகை
அனுஷ்கா யோகா மாஸ்டராக இருந்தும் கூட தனது உடல் எடையை குறைக்க முடியாமல் அல்லாடினார். வெளிநாடுகளில் பல முறை சிகிச்சை எடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதன் பிறகே அண்மையில் ஆஸ்திரியாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து பலன் அடைந்தார்.

ஆன்ட்டி
பாகுபலி 2 படத்திற்காக எடையை குறைக்குமாறு இயக்குநர் ராஜமவுலி கூற ஒன்றும் செய்ய முடியாமல் அனுஷ்கா திணறினார். குண்டான அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் ஆன்ட்டி என்று அழைக்க பாவம் மனமுடைந்துவிட்டார்.

நடிப்பு
ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு அனுஷ்கா மீண்டும் நடிக்க வந்துவிட்டார். சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படமான சயீரா நரசிம்ம ரெட்டியில் அனுஷ்கா கவுரவத் தோற்றத்தில் வருகிறாராம். வரலாற்று படங்கள் என்றால் அனுஷ்காவுக்கு அமோகமாக பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும்.


Click it and Unblock the Notifications











