சைலன்ஸ் படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. பார்க்கலாமா.. கூடாதா.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) படம் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகி உள்ளது.

வழக்கம் போல ஒடிடியில் நேரடியாக ரிலீஸ் படம் சுடச்சுட ஹெச்.டி. தரத்தில் தமிழ் ராக்கர்ஸில் வெளிவருவது போல இந்த படமும் வெளியாகி உள்ளது.

அதனால், ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஓசியில் படம் பார்த்துவிட்டு, காலையிலேயே ட்விட்டர் விமர்சனங்களை குவித்து வருகின்றனர். ஊமை மற்றும் காது கேளாதவராக நடித்துள்ள அனுஷ்காவின் சைலன்ஸ் படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என பார்ப்போமா..

மோசமான இயக்கம்

மோசமான இயக்கம்

சில கதைகள் ஸ்க்ரிப்ட் பேப்பரில் நல்லா இருக்கும், ஆனால், காட்சியாக திரையில் வரும் போது, அதன் தரம் டோட்டலாக மாறி விடுவது போல இந்த சைலன்ஸ் படமும் மாறி உள்ளது. சொதப்பலான திரைக்கதை மற்றும் மோசமான இயக்கத்தால், பெரிய நடிகர்கள் இருந்தும் படம் பார்க்க முடியவில்லை என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

பார்க்காம இருக்கிறது பெஸ்ட்

பார்க்காம இருக்கிறது பெஸ்ட்

ஹாலிவுட் நடிகரை எல்லாம் போட்டு ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட சைலன்ஸ் படம் தமிழ், தெலுங்கு என ஏகப்பட்ட மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. சிலர் இந்த படத்தை பார்க்காம ஸ்கிப் பண்ணிடுங்க அதுதான் பெஸ்ட் எனும் அளவுக்கு விமர்சித்துள்ளனர்.

தூக்கம் போச்சு

தூக்கம் போச்சு

நேற்று இரவு 10 மணிக்கே நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி விட்டது. இரவு முழுவதும் கண் விழித்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், நைட் தூக்கமே போயிடுச்சு, இந்த படத்தை எல்லாம் த்ரில்லர் படம் என்று சொல்லாதீங்க, சுத்த வேஸ்ட் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

நீயாடா என்ன கொலை பண்ண பார்த்த

நீயாடா என்ன கொலை பண்ண பார்த்த

பாதி படம் முடிஞ்சுடுச்சு, இன்டர்வெல் பிளாக் ட்விஸ்ட்டுன்னு ஒரு சீன் வைக்கிறாங்க.. அடப்பாவி சண்டாளா.. நீயாடா என்ன கொலை பண்ண பார்த்த என கேட்கும் அளவுக்கான செம சுமாரான இடைவேளை படம் டோட்டல் வேஸ்ட் என நேசமணி காமெடி மீமை எல்லாம் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

2 நிமிஷம் சைலன்ஸ்

2 நிமிஷம் சைலன்ஸ்

சைலன்ஸ் படத்திற்கு 2 நிமிஷம் சைலன்ட்டா மெளன அஞ்சலி செலுத்த வேண்டியது தான். அந்த அளவுக்கு இருக்கு, அந்த படத்தோட கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாமே என வேற லெவலில் பங்கம் செய்து வருகின்றனர். அமேசானில் வெளியாகும் எல்லா படமும் இப்படியேத் தான் மொக்கையா இருக்குமா? என்ற விமர்சனங்களும் பறந்து வருகின்றன.

Recommended Video

பேய் படமா எடுத்துட்டு வராங்க | CLOSE CALL WITH MUSIC DIRECTOR GIRISHH G PART-01 | FILMIBEAT TAMIL
மிஸ்ட்ரி த்ரில்லர்

மிஸ்ட்ரி த்ரில்லர்

சைலன்ஸ் படத்தின் கதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட விதம், மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் தான் படத்திற்கு எதிர் வினை ஆற்றுகின்றனர். மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பு சூப்பர், ஒரு முறை பார்க்கலாம் என இந்த விமர்சகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கலவையான விமர்சனங்களை சைலன்ஸ் படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X