»   »  எவனாச்சும் வதந்தி பரப்பினால் கேஸ் போட்டுடுவேன்: மிரட்டிய அனுஷ்கா

எவனாச்சும் வதந்தி பரப்பினால் கேஸ் போட்டுடுவேன்: மிரட்டிய அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனக்கும், பிரபாஸுக்கும் காதல் என்று வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என்று தன்னை சுற்றியுள்ளவர்களை எச்சரித்துள்ளார் அனுஷ்கா.

பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு திரையுலகில் பேச்சு எழுந்து அடங்கியது. இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக தற்போது மீண்டும் பேசப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் ஆளாளுக்கு பரபரப்பாக பேசும் டாபிக்கே இது தான்.

அனுஷ்கா

அனுஷ்கா

இந்த காதல் கிசுகிசுவை பரப்புவது யார் என்று பார்த்தால் அனுஷ்காவுக்கு நெருக்கமானவர்கள் தான் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் தனது உதவியாளர் ஒருவரை கூட பணிநீக்கம் செய்துவிட்டார்.

மிரட்டல்

மிரட்டல்

எனக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் என்று யாராவது வதந்தி பரப்பினால் வழக்கு தொடர்வேன் என்று அனுஷ்கா தனக்கு நெருக்கமானவர்களை எச்சரித்துள்ளாராம்.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸ், அனுஷ்கா காதல் செய்தி தீயாக பரவியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சாஹோ படத்தில் நடிக்க உள்ளனர். அவரை பரிந்துரைத்ததே பிரபாஸ் தான்.

திருமணம்

திருமணம்

பிரபாஸுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. ஆனால் பெண் தான் யார் என இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Anushka has reportedly warned the people close to her not to spread any rumour about her and Prabhas. She even threatened to sue them if they do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil