இயக்குனர் பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே!
Recommended Video

சென்னை: இயக்குனர் பாலாவின் ஆசை நிராசையாகிவிட்டது.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடித்த நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலாவும் மாறிவிட்டாரே என்று படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர்.
ஜோதிகா, ஜி.வி.க்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

நாச்சியார்
நாச்சியார் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை ரூ. 90 லட்சத்திற்கு போனது. ஆனால் படத்தை டப் செய்யாமல் ரீமேக் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாலா.

ரீமேக்
தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்பினார்கள். அவர் நடிக்க மறுத்தால் படத்தை டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்தனர்.

முடியாது
அனுஷ்கா தெலுங்கு படம் ஒன்றுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதனால் நாச்சியார் ரீமேக்கில் நடிக் முடியாது என்று கூறிவிட்டாராம் அவர்.

பாலா
அனுஷ்கா நடிக்க மறுத்ததால் நாச்சியார் படத்தை டப் செய்து வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே.


Click it and Unblock the Notifications











