பிரபாஸ் மேட்டரில் அனுஷ்கா இப்படி செய்வார்னு எதிர்பார்க்கவே இல்லை
ஹைதராபாத்: மீண்டும் பிரபாஸ் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் அனுஷ்கா.
பிரபாஸ், அனுஷ்கா தான் இன்றைய தேதிக்கு சூப்பர் ஹிட் ஜோடி. பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அனுஷ்கா அளித்த பதில் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அனுஷ்கா
தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் சாஹோவுக்கு டேட்ஸ் இல்லை. டேட்ஸ் பிரச்சனையால் சாஹோவில் நடிக்க முடியாது என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

பிரபாஸ்
அனுஷ்காவும், பிரபாஸும் சேர்ந்து பில்லா, மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ளனர். ஐந்தாவது முறையாக சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை.

பூஜா ஹெக்டே
அனுஷ்கா முடியாது என்று கூறியதை அடுத்து பூஜா ஹெக்டே சாஹோ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

நீல் நிதின் முகேஷ்
பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார். பிரபாஸுடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக நீல் நிதின் முகேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











