பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்.. நானும் சந்தித்திருக்கிறேன்.. மனம் திறந்த அனுஷ்கா!

சென்னை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லையை நானும் சந்தித்திருக்கிறேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பட்டையை கிளப்பி வந்தார். தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்

அருந்ததி, ருத்மாதேவி, பாகுபலி என மிரட்டல் படங்களையும் கொடுத்துள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் அனுஷ்கா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பேசியுள்ளார்.

உலக சினிமா வரை

உலக சினிமா வரை

சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை இந்த தொல்லை உள்ளது.

இல்லை என்று சொல்லமாட்டேன்

இல்லை என்று சொல்லமாட்டேன்

இந்நிலையில் அந்த தொல்லையை சந்தித்ததாக கூறியுள்ளார் அனுஷ்கா. மேலும் சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று தான் சொல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

எனக்கும் இருந்தது

எனக்கும் இருந்தது

மேலும் திரைத்துறை கவர்ச்சி மிகுந்தது என்பதால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக தெரிகிறது. எல்லா துறைகளிலுமே பாலியல் தொல்லை உள்ளது என்றும் கூறியுள்ளார். தான் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லைகளை சந்தித்ததாகவும் கூறியுள்ளார் அனுஷ்கா.

நிர்பந்தம் செய்வது தவறு

நிர்பந்தம் செய்வது தவறு

ஆனால் தான் அதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று மற்றவர்களுக்கு புரிந்ததும் அதுபோன்ற தொல்லைகள் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு என்றும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X