என்னை அழகாக்கியவரே... அன்பான ஆத்மாவே... மேக்கப்மேன் மரணத்துக்கு ஹீரோயின் உருக்கம்!

By

மும்பை: பிரபல மேக்கப்மேன் மரணமடைந்ததை அடுத்து, உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.

பிரபல மேக்கப் மேன், சுபாஷ் வாகல் (Subhash Vagal). சுப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், மும்பையை சேர்ந்தவர். இந்தி சினிமாவின் டாப் ஹீரோயின்களான அனுஷ்கா சர்மா, கரீனா கபூர், தபு, பிரீத்தி ஜிந்தா, காஜல் அகர்வால், சோனம் கபூர், அதிதி ராவ் ஹைதாரி, கேத்ரினா கைப் உட்பட பலருக்கு மேக்கப்மேனாக பணியாற்றி வந்தார்.

Anushka Sharma, Katrina Kaif share emotional posts on death of makeup artist Subbu

உடல் நலக்குறைவு காரணமாக இவர் நேற்று மரணமடைந்தார். இந்தி திரையுலகினர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அனுஷ்கா சர்மா எழுதியுள்ள உருக்கமான இரங்கல் செய்தியில், சுப்பு எளிமையானவர். கனிவானவர், மென்மையானவர். புத்திசாலியான மேக்கப்மேன். அவரை மேஸ்ட்ரோ என்றே அழைப்பேன். நாட்டின் மரியாதைக்குரிய மேக்கப்மேனாக அவர் எப்போதும் கருதப்படுவார்.

திறமையான மேக்கப் கைகள் மூலம், என்னை ஒவ்வொரு முறையும் அழகாகக் காட்டியவர் அவர்தான். அவர் விட்டுச்சென்ற அழகான பணிகள் நினைவுக் கூரப்படும். அற்புதமான மகன், அன்புச் சகோதரன், அழகான ஆத்மா நம்மை விட்டுச் சென்றுவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

இதே போல காஜல் அகர்வால், கேத்ரினா கைப் உள்ளிட்ட நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X