நிறை மாத கர்ப்பத்துடன்.. அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா.. திணறுது இன்ஸ்டாகிராம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது கர்ப்ப வயிற்றை காட்டி எடுத்த போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

உலகளவில் பிரபலமான Vogue ஃபேஷன் இதழுக்காக இந்த போஸை அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ளார்.

இவர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அனுஷ்கா சர்மா, ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான் என பாலிவுட்டின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

வெப்சீரிஸ் தயாரிப்பு

வெப்சீரிஸ் தயாரிப்பு

ஷாருக்கானின் ஜீரோ படத்திற்கு பிறகு பெரிதாக எந்தவொரு படத்திலும் கமீட் ஆகவில்லை. மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆங்கிரேஸி மீடியம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தலை காட்டிய இவர், அமேசான் பிரைமில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாதாள் லோக் வெப்சீரிஸையும் புல்புல் எனும் நெட்பிளிக்ஸ் படத்தையும் இந்த ஆண்டு தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று பேர் ஆகப்போறோம்

மூன்று பேர் ஆகப்போறோம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கணவர் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை அனுஷ்கா சர்மா, நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம் என செம க்யூட்டாக பதிவிட்டார். வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்கப் போவதையும் அறிவித்து இருந்தார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டினர்.

நிறைமாத கர்ப்பம்

நிறைமாத கர்ப்பம்

வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பத்துடன் வோக் இந்தியா மேகஸினின் புத்தாண்டு அட்டைப்படத்துக்கு தனது கர்ப்ப வயிற்றை காட்டியபடி அனுஷ்கா சர்மா போஸ் கொடுத்துள்ளார். அந்த அட்டைப் படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

ஒரு மில்லியனை தாண்டி

ஒரு மில்லியனை தாண்டி

அனுஷ்கா சர்மா நிறைமாத கர்ப்பத்துடன் எடுத்த போட்டோஷூட் போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளை தாண்டி அதனை வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். சீக்கிரமே குட்டி கோலியையோ அல்லது குட்டி அனுஷ்காவையோ பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X