»   »  கோஹ்லி பாராட்டிய அனுஷ்காவின் என்.ஹெச்.10 படம் 8 நாட்களில் ரூ.21 கோடி வசூல்

கோஹ்லி பாராட்டிய அனுஷ்காவின் என்.ஹெச்.10 படம் 8 நாட்களில் ரூ.21 கோடி வசூல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்துள்ள என்.ஹெச். 10 படம் ரிலீஸான 8 நாட்களில் ரூ.20.6 கோடி வசூல் செய்துள்ளது.

ஷாருக்கான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை தற்போது காதலித்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா தயாரிப்பாளர் ஆக முடிவு செய்தார்.

அவர் என்.ஹெச். 10 என்ற இந்தி படத்தை தயாரித்து, நடிக்கவும் செய்தார்.

ரிலீஸ்

ரிலீஸ்

கௌரவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் என்.ஹெச்.10. படம் கடந்த 13ம் தேதி ரிலீஸானது.

பட்ஜெட்

பட்ஜெட்

ரூ.14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட என்.ஹெச். 10 படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை கொண்டது.

வசூல்

வசூல்

படம் ரிலீஸான உடன் வசூல் மந்தமாக இருந்தது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் சூடுபிடித்துள்ளது. படம் ரிலீஸான 8 நாட்களில் ரூ.20.6 கோடி வசூல் செய்துள்ளது.

கோஹ்லி

கோஹ்லி

உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பு இந்த என்.ஹெச்.10 படத்தை தான் கோஹ்லி பார்த்துவிட்டு ட்விட்டரில் காதலியை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தான் தயாரித்த முதல் படமே வெற்றிகரமாக ஓடுவதால் மகிழ்ச்சியில் உள்ளார் அனுஷ்கா சர்மா.

English summary
Anushka Sharma's production venture NH 10 has collected Rs. 20.6 crores in 8 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil