பிரபல கிரிகெட் வீரரின் மனைவி தயாரிக்க போகும் முதல் படம் ... கோலிவுட்டில் தயாரிப்பா?
மும்பை : கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவி மற்றும் பாலிவுட்டின் சிறந்த நாயகி என இரு பெரிய அடையாளத்தை கொண்டவர் அனுஷ்கா சர்மா. தற்போது அனுஷ்கா சர்மா ஒரு படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை அனுஷ்கா சர்மா பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நாயகி .இவர் கடைசியாக ஷாருக்கானுடன் ஜீரோ படத்தில் நடித்திருந்தார் .இந்த படத்தை பிரபல இயக்குனரான ஆனந்த் .எல்.ராய் இயக்கியிருந்தது குறிப்பிடதக்கது .இதன் பின் அங்கரேஸி மீடியம் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் வந்து சென்றார் அனுஷ்கா .

தற்போது அனுஷ்கா சர்மா ஒரு படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .ஒரு பக்கம் தனது கணவர் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த நிலையில் தற்போது தன் பங்கிற்கு தயாரிப்பில் சாதிக்க களம் இறங்கியிருக்கிறார் அனுஷ்கா .
அனுஷ்கா சர்மா 2014ம் வருடம் க்ளீன் ஸ்லேட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது அண்ணனுடன் இணைந்து துவங்கினார் .இந்த நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் அனுஷ்கா.இவர் இணை தயாரிப்பில் இதுவரையிலும் மூன்று படங்களை தயாரித்து இருக்கிறார்.இந்த மூன்று படங்களுமே அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் .அவை என் ஹச்10 ,பில்லௌவுரி மற்றும் பரி ஆகும் .இந்த படங்களை பல முக்கிய தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரித்து இருந்தார் அனுஷ்கா .

அனுஷ்கா தற்போது தயாரிக்க உள்ள படம் நேரடியான தயாரிப்பு படம் என்பது போல சில தகவல்கள் வந்துள்ளன.இதனால் இவர் நேரடியாக தயாரிக்க போகும் முதல் படத்தை பற்றிய அப்டேட்டுகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது .
விராட் கோலி கிரிக்கெட்டில் சாதித்து வந்தாலும் சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.இந்த வீழ்ச்சியில் இருந்து அவர் கட்டாயம் மீள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது .இந்த நிலையில் இவரின் மனைவி அனுஷ்கா படம் தயாரிக்க போகும் தகவல் ரசிகர்களை சோர்ந்த ரசிகர்களை ஆச்சரியத்தில் எழுந்து நிற்க வைத்து இருக்கிறது .இந்நிலையில் அதிகாரபூர்வ தகவலுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர் .


Click it and Unblock the Notifications











