ஹேப்பி நியூஸ்.. குட்டி கோலியா? குட்டி அனுஷ்காவா.. ஒரே குஷியில் நட்சத்திர தம்பதியினர்!

மும்பை: நடிகை அனுஷ்கா சர்மா அம்மா ஆகப் போகும் சந்தோஷ செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

ஷாருக்கானின் ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா சர்மா.

கடந்த 2017ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலியை திருமணம் செய்து கொண்டார்.

நோ படம்

நோ படம்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் நாயகியான அறிமுகமானார் அனுஷ்கா சர்மா. கடைசியாக 2018ம் ஆண்டு ஷாருக்கானின் ஜீரோ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், அதன் பிறகு 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் ஹீரோயினாக கமீட் ஆகவில்லை.

இர்ஃபான் கான் படத்தில்

இர்ஃபான் கான் படத்தில்

ஆனால், இந்த ஆண்டு வெளியான மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் ஆங்கிரேஸி மீடியம் படத்தில் இடம்பெற்ற "குடி நு நச்னே தி" எனும் பாடலில், அனுஷ்கா சர்மாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இந்த லாக்டவுனில் கணவர் கோஹ்லியுடன் ரொம்ப ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

தயாரிப்பு பணிகள்

தயாரிப்பு பணிகள்

நடிப்பில் கவனம் செலுத்த வில்லை என்றாலும், தயாரிப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் நடிகை அனுஷ்கா சர்மா. அமேசான் பிரைமில் வெளியான பாதாள் லோக் வெப்சீரிஸ் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான புல்புல் திரைப்படம் ஆகியவற்றை தனது பேனரில் தயாரித்து இருந்தார்.

விவாகரத்து செய்ய வேண்டும்

விவாகரத்து செய்ய வேண்டும்

பாதாள் லோக் வெப்சீரிஸ் வெளியான நிலையில், இந்து மதக் கடவுள்களை அந்த வெப்சீரிஸ் அவமதித்துள்ளதாக சர்ச்சைகள் வெடித்தன. மேலும், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி இவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நெட்டிசன்கள் கிளப்பி வந்தனர். ஆனால், அதையெல்லாம் அனுஷ்கா பொருட்படுத்தவே இல்லை.

அம்மாவாகும் அனுஷ்கா

அம்மாவாகும் அனுஷ்கா

இந்நிலையில், தற்போது விராத் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம் என தான் சீக்கிரமே அம்மாவாக போகிறேன் என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்துள்ளார் அனுஷ்கா சர்மா. மேலும், ஜனவரி 2021ம் ஆண்டு குழந்தை பிறக்கப் போவதையும் அறிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து

ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ள தகவல் அறிந்ததும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், "ஓ மை காட்.. வாழ்த்துக்கள்" என வாழ்த்தியுள்ளார். சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தொடர்ந்து இந்த நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X