Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மீண்டும் இணையும் பாகுபலி-தேவசேனா ஜோடி.. அடடா செம கெமிஸ்டிரியாச்சே.. குஷியில் ரசிகர்கள் !
சென்னை : பாகுபலி படத்தில் அழகான கெமிஸ்டிரி மூலம் அனைவரையும் திக்குமுக்காட வைத்த பாகுபலி-தேவசேனா ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைத்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து காத்திருந்தனர். ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்தார்.
பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. குறிப்பாக சண்டை காட்சியில் இருவரும் இணைந்து அசத்தி இருப்பார்கள். பாகுபலி படத்தை அடுத்து இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடலை ஏற்றிய அனுஷ்காவால் மீண்டும் எடையை குறைக்க முடியாமல் குண்டாகவே இருந்தார். இதனால், அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.
பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஆடியன்ஸ்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்தார். பெரும் பொருட் செலவில் வெளியானத் திரைப்படம் தோல்வி அடைந்தது. தற்போது பிரபாஸ், சலார், ஆதி புருஷ், ப்ராஜெக்ட் கே, படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்னன.
விஜய் படத்தோட டைட்டில் சிங்கிள் ரெடி.. யாரு பாடியிருக்காங்க தெரியுமா?
இந்நிலையில் நடிகர் பிரபாஸ், இயக்குநர் மாருதியின் முழு நீள நகைச்சுவை படம் ஒன்றில் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த அறிவிப்பு தசரா சமயத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் வெளிவந்துள்ளது. அனுஷ்கா நடித்த பாகமதி, நிஷப்தம் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாததால், அனுஷ்கா திருமணம் செது கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.