சிரிப்பு நோயை போக்கு சிவபெருமானே..மகா சிவராத்திரி வழிபாட்டில் அனுஷ்கா பங்கேற்பு!

பெங்களூரு: நடிகை அனுஷ்காவுக்கு சிரிப்பு நோய் இருப்பதாக சமீபத்தில் வெளிப்படுத்திய நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு நடத்தி உள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா.

உடல் பருமன் காரணமாக புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருந்து வந்த அனுஷ்கா தற்போது சமையல் கலை நிபுணராக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அருந்ததி முதல் பாகுபலி வரை

அருந்ததி முதல் பாகுபலி வரை

தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான சூப்பர் படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா பிரம்மாண்ட படங்களில் நடித்து உலகளவில் தனக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். அருந்ததி, பாகுபலி முதல் மற்றும் இரண்டு பாகங்கள், ருத்ரமாதேவி, பாகமதி என பல பெரிய படங்களில் அசத்தி உள்ளார் நடிகை அனுஷ்கா.

சிரிப்பு நோய்

சிரிப்பு நோய்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை அனுஷ்கா தனக்கு சிரிப்பு நோய் இருப்பதை வெளிப்படுத்தினார். சிரிக்கிறது எல்லாம் ஒரு வியாதியா என பலரும் நினைக்கக் கூடும், ஆனால், தனக்கு சிரிப்பு வந்தால் 20 நிமிடத்திற்கு மேல் சிரிப்பேன் என்றும் மூளையில் நடைபெறும் ஒரு வித ரசாயன மாற்றம் காரணமாக இந்த நோய் வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

சிவராத்திரி வாழ்த்து

சிவராத்திரி வாழ்த்து

நடிகை அனுஷ்கா மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யும் த்ரோபேக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். நடிகை அனுஷ்காவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

பெங்களூரு கோயிலில் வழிபாடு

பெங்களூரு கோயிலில் வழிபாடு

நடிகை அனுஷ்கா பெங்களூருவில் உள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வழிபாடு நடத்திய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெள்ளை நிற சுடிதார் அணிந்து கொண்டு சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார் அனுஷ்கா.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

நடிகை அனுஷ்காவும் பிரபாஸும் காதலிப்பதாக பாகுபலி படம் வெளியான சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என இருவரும் அதை மறுத்து இருந்தனர். தொடர்ந்து அனுஷ்காவுக்கு வரன் பார்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டுக்குள் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X