நடிகை அனுஷ்காவுடன் பிரபாஸ்.. அடடா.. அந்த பிரபலமான கல்யாண ஸ்டில்லுக்கு பின்னே இப்படியொரு ரகசியமா?

By

சென்னை: அனுஷ்காவும் பிரபாஸூம் திருமண கோலத்தில் இருக்கும் பிரபலமான ஸ்டில்லுக்குப் பின் இருக்கும் ரகசியம் இப்போது தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார், அனுஷ்கா ஷெட்டி. இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும்.

பிரபாஸூடன் காதல்

பிரபாஸூடன் காதல்

அதை அவர் பின்னர் மறுப்பார். பிரபல ஹீரோ பிரபாஸை அவர் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று இருவரும் மறுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

பின்னர் நடிகை அனுஷ்கா, கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு விவாகரத்தான தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அதையும் அவர் மறுத்திருந்தார்.

சைலன்ஸ் ரிலீஸ்

சைலன்ஸ் ரிலீஸ்

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான சைலன்ஸ் படம் ஓடிடியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள இந்தப் படம் முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெறவில்லை.

கண்டிப்பாக நடிப்பேன்

கண்டிப்பாக நடிப்பேன்

இந்தப் படம் தொடர்பாக நடிகை அனுஷ்கா, ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், நீங்களும் பிரபாஸூம் அருமையான ஜோடி. பிரபாஸூடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அனுஷ்கா, அதற்கான கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன், உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

மற்றொரு ரசிகர், அனுஷ்காவும் பிரபாஸும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, இந்த போட்டோ பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அனுஷ்கா, அது மிர்ச்சி (தெலுங்கு) படத்தின் ஷாட்டுக்கு இடையே நாங்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது எடுத்த கேண்டிட் கிளிக்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Official Contestant List • Kamal Hassan
நெருக்கமான படம்

நெருக்கமான படம்

போட்டோ நன்றாக இருந்ததால் அதையே அந்த படத்தின் விளம்பரத்துக்கும் பயன்படுத்தினர். என் மனதுக்கு நெருக்கமான படம் மிர்ச்சி என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா. அனுஷ்காவுக்கும் பிரபாஷூக்கும் திருமணம் அல்லது அவர்கள் பற்றிய செய்திகள் வரும்போதேல்லாம் இந்த புகைப்படத்தைதான் மீடியா பயன்படுத்தி வருகிறது. இதற்கு பின்னால் இப்படியொரு ரகசிய சுவாரஸ்யம் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X