ஆக்ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிகை அனுஷ்கா தான்: ஆர்யா புகழாரம்
சென்னை: சினிமாவில், ஆக்ஷன் என்றாலே ஆண்கள் தான் என்ற பிம்பத்தை உடைத்தவர் விஜயசாந்தி. அவருக்குப் பின் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த நடிகையும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவில்லை என்ற போதும், குதிரையேற்றம், வாள் சண்டை என புராண காலத்து ஆக்ஷன் படங்களில் கலக்கி வருகிறார் அனுஷ்கா.
அருந்ததி தான் அனுஷ்காவின் அழகை மட்டுமல்ல, அவரது ஆக்ஷனையும் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய முதல் படம். தற்போது 'ருத்ரமாதேவி' மற்றும் 'பாகுபலி'யிலும் ஆக்ஷனில் கலக்கி வருகிறாராம் அனுஷ்கா.
தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'.இதிலும் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் உண்டாம். இது குறித்து அப்படத்தின் ஹீரோவான ஆர்யா, தன் ஹீரோயின் பற்றி படத்தின் ஆடியோ ரிலீசில் புகழ்ந்து தள்ளி விட்டார்.

ஆக்ஷன் தகுதி...
எல்லா கதாநாயகிகளுக்கும் ஆக்ஷன் என்பது சரிப்பட்டு வராது. அதற்கென்று சரியான் உடற்கட்டு இருக்க வேண்டும். எனவே, ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்குரிய சரியான தகுதிகள் அனுஷ்காவிடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.

காட்சியோடு ஒன்றி விடுவார்....
அனுஷ்கா ஆக்ஷன் காட்சிகளில் தோன்றும் போது அது நிச்சயமாக செயற்கையாக, போலியாக தெரியாது. ஏனென்றால் அந்தளவுக்கு காட்சியோடு ஒன்றிவிடும் சிறப்பு பெற்றவர் அனுஷ்கா.

வாள் சண்டைக் காட்சிகள்...
ஆக்ஷன் காட்சிகளில் அதகளப் படுத்தி விடுவார். அவரது திறமை வாள் சண்டை காட்சிகளில் நன்றாகப் புலப்படும்.

ரசிகர்களுக்குப் பிடிக்கும்...
நான் அடிச்சுச் சொல்றேன் நிச்சயமா இந்தப் படத்துல வர்ற ஆக்ஷன் காட்சிகளையும் ரசிகர்கள் ரசிச்சுப் பார்ப்பாங்க' எனத் தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் ராணி...
காதலும், கற்பனையும் பிண்ணிப் பிணைந்த இரு வேறு உலகக் கதையான ‘இரண்டாம் உலகம்' படத்திலும் அனுஷ்காவிற்கு ஆக்ஷன் காட்சிகள் உண்டாம்.


Click it and Unblock the Notifications











