16 வருடம் திரைப்பயணம்… அனுஷ்கா ஷெட்டிக்கு குவியும் வாழ்த்து !
சென்னை : அனுஷ்கா ஷெட்டி திரைத்துறைக்குள் நுழைந்து 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
அவருக்கு மற்ற முன்னணி நடிகர் நடிகையர் தொலைப்பேசியின் மூலம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அனுஷ்காவின் ரசிகர்கள் #16Yearsofanushkashetty என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி அவருக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர்

அறிமுகம்
2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார்.

தமிழில் அறிமுகம்
2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது.

திறமையான நடிகை
தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது.

துணிச்சலுடன்
இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்தார். வரலாற்றுத் திரைப்படங்களிலும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களான ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற படங்களில் துணிச்சலுடன் நடித்து அதிலும் வெற்றிகண்டார்.

மிகவும் குண்டாக
மேலும், இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக உடல் எடையைகூட்டி அப்படத்தில் மிகவும் குண்டான பெண்ணாக காணப்பட்டார். இருப்பினும் இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது. மேலும் அந்த படத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க பெரும்அவதிப்பட்டார். அனுஷ்கா.60

ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி திரைத்துறையில் நுழைந்து 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனை அவரின் ரசிகர்கள் #16Yearsofanushkashetty என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி அவருக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர். மேலும், முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











