வந்தாச்சு.. வந்தாச்சு.. நானும் வந்தாச்சு.. ட்விட்டரில் இணைந்த அனுஷ்கா.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு!

By

சென்னை: பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, ட்விட்டரில் இப்போது இணைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ்.

மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகி இருக்கிறது,

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே

அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில், மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், கடந்த வருடமே இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா லாக்டவுனால் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்தப் படம் அமேசான் பிரைமில் நாளை ரிலீஸ் ஆகிறது.

நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம் பற்றி அனுஷ்கா கூறும்போது, நான் இதுவரை நடித்த கேரக்டர்களில் இருந்து இந்த படத்தின் சாக்‌ஷி கேரக்டர் மாறுபட்டது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் ஆக்டிவாக இருக்கும்போது, அனுஷ்கா, இன்ஸ்டாவில் மட்டுமே இருந்தார்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

அதில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் படங்கள் பற்றிய செய்திகளை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகை அனுஷ்கா.

Recommended Video

OTTல படம் பார்த்தா HEADPHONES USE பண்ணுங்க| CLOSE CALL WITH DIRECTOR HEMANT PART-02| FILMIBEAT TAMIL
அதிகாரபூர்வ ட்விட்டர்

அதிகாரபூர்வ ட்விட்டர்

அவர் தனது முதல் ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் வணக்கம். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது என் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு. சில சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு இதைப் பின் தொடருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X