சயீரா நரசிம்ம ரெட்டியில் ஜான்சி ராணியாக மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி

சென்னை: நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று திரைப்படமான சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் தற்போது நடிகை அனுஷ்கா ஷெட்டியும் இணைந்துள்ளார். அனுஷ்கா ஷெட்டி சுதந்திர போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி வாழ்ந்து காட்டியுள்ளார். இவருடன் நயன்தாரா, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம், பெரும்பாலானோர் அறிந்திடாத இந்திய சுதந்திர போராட்ட வீரனின் வாழ்க்கை வரலாறு கதை ஆகும்.

Anushka Shetty joined in Historical film Saira Narasimha Reddy

இந்த திரைப்படத்தை கொனிடெலா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ராம் சரண் தயாரிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணியை ரத்னவேலு மற்றும் எடிட்டிங் பணியை ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் கையாள்கின்றனர். சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் கதையை பருச்சுரி பிரதர்ஸ் எழுதியுள்ளார். படத்தின் வசனங்களை விஜய் பாலாஜி உருவாக்கியுள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் பாடல் சயீரா என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவம் என்பதால், அதற்கேற்ப சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை இருக்கையிலிருந்து துள்ளி எழும் வகையில் மிகப் பிரமாண்டமாக இடம் பெறக்கூடும் என்று ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Anushka Shetty joined in Historical film Saira Narasimha Reddy

அதிலும் மெகாஸ்டார் சிரஞ்சீவி படம் என்பதால் சண்டைக்காட்சிகளும் கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். இதனால் சண்டைக்காட்சிகளும் அதற்கேற்ப ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு சண்டைக்காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. சண்டைக் காட்சிகளை கிரெக் பவல், லீ விட்டேக்கர் மற்றும் ராம்-லக்ஷ்மன் ஆகியோர் கையாள்கின்றனர்.

இந்தியாவின் முன்னணி நடிகர்களுடன், ஜான்சி ராணியாக சிறப்பு வேடத்தில் அனுஷ்கா ஷெட்டி சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார். அனுஷ்கா ஷெட்டி கடைசியாக நடித்த திரைப்படம் பாகமதி. தற்போது அனுஷ்கா நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் ஒரு ஊமைக் கலைஞராக நடிக்கிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகயிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X