'எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிறது...' பிரபல ஹீரோ பற்றி அசலத்தாக மனம் திறந்த அனுஷ்கா!
சென்னை: நடிகை அனுஷ்கா, பிரபல ஹீரோவுக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் பற்றி தெரிவித்துள்ளார்
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்). இதில் மாதவன், அஞ்சலி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தொடரும் கிசுகிசு
நாங்கள் நண்பர்கள்தான், எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று இருவரும் கூறு வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் இந்த கிசு கிசு தொடர காரணம் என்று கூறப்படுகிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38.

திருமணம்
அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்பட்டது. அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், இதை அனுஷ்கா மறுத்தார்.

இஞ்சி இடுப்பழகி
இந்நிலையில், அவர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கே.ராகவேந்திர ராவின் மகன். தமிழில், ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கியவர். இந்தியில் ஜட்ஜ்மென்டல் ஹே கியா என்ற படத்தை இயக்கியுள்ளார். இது பற்றிய செய்தி தெலுங்கு சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையும் அனுஷ்கா மறுத்தார்.

அப்படி ஏதும் இல்லை
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பிரபாஸ் பற்றி கூறும்போது, 'அவரை எனக்கு 15 வருடமாகத் தெரியும். என் சிறந்த நண்பர்களில் அவரும் ஒருவர். நாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்பதால் எங்களை பற்றிய கிசுகிசுக்கள் வெளிவருகிறது. எங்களுக்குள் அப்படி ஏதும் இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். தெலுங்கு சினிமாவில், நானி, ராணா, பிரபாஸ், வம்சி, ராஜமவுலி குடும்பத்தினர் உட்பட பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











