அம்மாயி.. அழகு பொம்மாயி.. மலையாள படத்துக்கே இத்தனை கோடி சம்பளமா?.. மாஸ் காட்டுறாரே அனுஷ்கா!
திருவனந்தபுரம்: உடல் எடை அதிகரித்ததன் காரணமாக நடிகை அனுஷ்கா சினிமாவில் இருந்து நடிப்பதை சில ஆண்டுகள் தவிர்த்து வந்தார். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் ஹீரோயினாக அனுஷ்கா நடித்திருந்தார். அந்த இரு படங்களும் அவருக்கு பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
அதன் பின்னர் பாகமதி படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. 2020ம் ஆண்டு மாதவன் உடன் இணைந்து நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் படுதோல்வியை சந்தித்தது.

மீண்டும் நடிப்பதற்கு ரெஸ்ட் கொடுத்த அனுஷ்கா 3 ஆண்டுகள் ஓய்வுக்குப் பின்னர் கடந்த ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்திருந்தார். ஜவான் படத்துக்குப் போட்டியாக வெளியான நிலையில், அந்த படம் காணாமலே போய் விட்டது.
பாசிட்டிவ் விமர்சனங்கள்: வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக அந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில், அடுத்ததாக மலையாளத்தில் நடிகை அனுஷ்கா அறிமுகமாக உள்ளார். இந்த ஆண்டு மலையாள திரையுலகம் பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. மலைக்கோட்டை வாலிபன், கோட் லைஃப் படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், அடுத்து மலையாள திரையுலகமும் பெரிய பட்ஜெட்டில் படங்களை உருவாக்க முன் வரும்.
மலையாளத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா: சூப்பர் எனும் நாகார்ஜுனா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான அனுஷ்கா மாதவன் நடிப்பில் வெளியான 'ரெண்டு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், மலையாள இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் ஜெயசூர்யா, பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்து வரும் 'காத்தனார் - தி வைல்டு சார்சரர்' எனும் பிரம்மாண்ட படத்தின் மூலம் அனுஷ்கா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.
75 கோடி பட்ஜெட்: மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 21 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. அந்த படமே 200 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், அனுஷ்கா நடிப்பில் மலையாளத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள காத்தனார் திரைப்படம் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.
அனுஷ்கா சம்பளம்: பாகுபலிக்கு பிறகு அனுஷ்காவின் சம்பளம் 10 கோடி வரை உயர்ந்தது. ஆனால், சினிமாவில் இருந்து அவர் சில ஆண்டுகள் ஒதுங்கிய நிலையில், அவரது மார்க்கெட் அதிரடியாக சரிந்தது. ஆனாலும், தெலுங்கில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்துக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அனுஷ்கா மலையாள படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளாராம். கடந்த மார்ச் 15ம் தேதி முதல் அந்த படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கே 10 கோடி ரூபாய் சம்பளம் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. நடிகைகள் 1 கோடி சம்பளம் வாங்குவதே பெரிது என்கிற நிலையில், அனுஷ்காவுக்கு இத்தனை கோடிகள் கொடுக்கிறார்களே என மலையாள திரையுலகமே ஆச்சர்யத்தில் பார்த்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











