ம்ஹூம் நான் வரலை.. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த பிரபல டாப் ஹீரோயின்.. ஏன் இப்படி?

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபல முன்னணி ஹீரோயின் திடீரென மறுத்துவிட்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் 4 ஆம் தேதி விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது.

பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது.

பிரமாண்ட அரங்கம்

பிரமாண்ட அரங்கம்

தொலைத் தொடர்பு, இன்டர்நெட், டிவி என தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாமல், 100 நாள்கள் இந்த வீட்டில் இருப்பதுதான், இந்நிகழ்ச்சியின் போட்டி விதி. இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4-க்காக வெளியிடப்பட்ட கமல்ஹாசனின் அட்டகாசமான புரமோ வீடியோ வைரல் ஆனது. அவரது லுக்கும் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் 4 வீட்டுக்கு வருகிறவர்கள் பற்றி தகவல்கள் வெளியாகி வருகிறது.

விஜே அர்ச்சனா

விஜே அர்ச்சனா

இந்த சீசனில் நடிகைகள் சஞ்சனா சிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் நாகார்ஜுனா

நடிகர் நாகார்ஜுனா

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பிரபல தமிழ் நடிகை மோனல் கஜ்ஜார், பாடகர் நோயல் சீன், அம்மா ராஜசேகர், துணை யூடியூபர் கங்காவ்வா, நிகழ்ச்சி தொகுப்பாளர் லாஸ்லியா மஞ்சுநாத் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக நடிகை அனுஷ்கா கலந்துகொள்வதாக இருந்தது. அவர் நடித்துள்ள 'நிசப்தம்/ சைலன்ஸ்' படம் வரும் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோசனை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்த படக்குழு திட்டமிட்டது.

மறுத்து விட்டார்

மறுத்து விட்டார்

ஆனால், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நடிகை அனுஷ்கா மறுத்துவிட்டார். ஆன்லைன் புரமோஷன்களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்றும் அவர் கூறிவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 'சைலன்ஸ்' படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X