இணையத்தை கலக்கிய அனுஷ்காவின் சார்லி சாப்ளின் ஃபோட்டோ

சென்னை : தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் புகழ்பெற்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. அதிலும் பாகுபலி படத்திற்கு பிறகு பலராலும் விரும்பப்படும் இந்திய நடிகையாகி விட்டார் அனுஷ்கா. தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கில் டாப் ஹீரோயின் ஆன பிறகே, கோலிவுட்டால் கவனிக்கப்படும் நடிகையானார் அனுஷ்கா.

மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் அதிக திறமையான, பலரையும் ஈர்க்க கூடிய நடிகையாக இருப்பவர் அனுஷ்கா தான். அதனால் அனுஷ்கா என்ன செய்தாலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக ஏற்றினார் அனுஷ்கா.

குண்டு பெண்ணான அனுஷ்கா

குண்டு பெண்ணான அனுஷ்கா

பிறகு பாகுபலி 2 படத்திற்காக உடல் எடையை குறைத்தார். தற்போது மீண்டும் குண்டுப் பெண் தோற்றத்திற்கு மாறி உள்ளார் அனுஷ்கா. இந்த ஃபோட்டோவையும் வெளியிட்டு அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

நிசப்தமான அனுஷ்கா

நிசப்தமான அனுஷ்கா

கடைசியாக நிசப்தம் படத்தில் நடித்த அனுஷ்கா, அதற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. அதற்குள் லாக்டவுன், கொரோனா இரண்டாம் அலை வந்து விட்டதால் அனுஷ்கா பற்றிய செய்திகளை பலரும் மறந்தே போய் விட்டனர்.

வைரலான அனுஷ்கா ஃபோட்டோ

வைரலான அனுஷ்கா ஃபோட்டோ

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் இதுவரை வெளிவராத அனுஷ்காவின் க்யூட்டான ஸ்மைல் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் பரவி, வைரலானது. மொசைக் அவர் ஒன்றில் வரையப்பட்ட சார்லி சாப்ளின் ஓவியத்திற்கு அருகில் இருந்து இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டுள்ளது.

சார்லி சாப்ளின் ஓவியம்

சார்லி சாப்ளின் ஓவியம்

1921 ம் ஆண்டு வெளிவந்த தி கிட் படத்தில் சார்லி சாப்ளினும், ஒரு குழந்தையும் சுவரின் பின்னால் ஒளிந்திருந்து பார்க்கும் இந்த ஃபோட்டோ மிகவும் பிரபலம். இந்த ஓவியத்திற்கு அருகே சுவரில் ஒளிந்தபடி நின்று அனுஷ்கா போஸ் கொடுத்ததால் இந்த ஃபோட்டோவும் தற்போது பிரபலமாகி விட்டது. 1921 ம் ஆண்டு வெளிவந்த தி கிட் படத்தில் சார்லி சாப்ளினும், ஒரு குழந்தையும் சுவரின் பின்னால் ஒழிந்திருந்து பார்க்கும் இந்த ஃபோட்டோ மிகவும் பிரபலம். இந்த ஓவியத்திற்கு அருகே சுவரில் ஒழிந்தபடி நின்று அனுஷ்கா போஸ் கொடுத்ததால் இந்த ஃபோட்டோவும் தற்போது பிரபலமாகி விட்டது.

ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

இந்த ஃபோட்டோ ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அனுஷ்கா ஷெட்டி என்ற ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டு, இந்த ஃபோட்டோ இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X