தீபாவளி அதுவுமா ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டீங்களே அனுஷ்கா?

அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நிசப்தம் படத்தின் ப்ரீ டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது. ஆனால், அதில், அனுஷ்காவின் கை மட்டும் தான் காண்பிக்கப்பட்டுள்ளதால், அனுஷ்காவின் தரிசனம் கிடைக்காத

சென்னை: அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் டீசர் வரும் 7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிசப்தம் படத்தின் ப்ரீ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

அனுஷ்கா லீடு ரோலில் நடித்து வரும் நிசப்தம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 5 மொழிகளில் வெளிவருகிறது. ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் நிசப்தம் திரைப்படம் ஆங்கிலத்தில் சைலன்ஸ் எனும் தலைப்பில் உருவாகி வருகிறது.

நடிகர்கள்

நடிகர்கள்

பாகமதி படத்திற்கு பிறகு மீண்டும் லீடு ரோலில் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன், அஞ்சலி மற்றும் அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுந்தர்.சியின் 'இரண்டு' படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்

என்ன ரோல்

நிசப்தம் என்ற தலைப்புக்கு ஏற்ப படத்தின் நாயகி அனுஷ்கா இந்த படத்தில் வாய் பேசாத ஊமைப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. சைலன்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரீ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்போ?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் டீசருக்கு முந்தைய ப்ரீ டீசர் வெளியாகியுள்ளது. அதில், வரும் நவம்பர் 7ம் தேதி டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிசப்தம் படம் உருவாக்கப்பட்டு வரும் 5 மொழிகளிலும் இந்த ப்ரீ டீசர் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

தீபாவளி பண்டிகையன்று அனுஷ்காவின் நிசப்தம் ப்ரீ டீசர் வெளியாகியுள்ள தகவல் அறிந்த அனுஷ்கா ரசிகர்கள் ஆர்வமாக அந்த ப்ரீ டீசரை பார்த்தனர். ஆனால், அதில், அனுஷ்காவின் கை மட்டுமே காட்டப்பட்டு இருப்பதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் நவம்பர் 7ம் தேதி தான் தலைவியின் தரிசனம் கிடைக்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X