நாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு!
சென்னை: அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படம் அமேசானில் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.
மாதவன், அனுஷ்கா நடித்துள்ள படம், நிசப்தம். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகி இருக்கிறது,
இந்தப் படத்துக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஷாலினி பாண்டே
முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில், மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

தள்ளி வைப்பு
இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. அந்த தேதியிலும் ரிலீஸ் ஆகவில்லை. பின் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

பொன்மகள் வந்தாள்
அதற்கு கொரோனா பிரச்னை ஏற்பட்டதால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்பட சில படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனால் இந்த படமும் ஓடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

சஸ்பென்ஸ் த்ரில்லர்
இந்நிலையில் இப்போது இந்தப் பட நிறுவனமும் அமேசானும் அதை உறுதி செய்துள்ளன. இந்த படம் அக்டோபர் 2 ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம் பற்றி அனுஷ்கா கூறும்போது, நான் இதுவரை நடித்த கேரக்டர்களில் இருந்து இந்த படத்தின் சாக்ஷி கேரக்டர் மாறுபட்டது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











