போன வாரம் பார்த்த ‘அந்த’ அனுஷ்காவா இது.. ப்பா.. நம்ம கண்ணையே நம்ப முடியலையே!
நிசப்தம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலிணி பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நிசப்தம். இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படம்.
இந்த படத்தில் எஃப்.பி.ஐ (அமெரிக்க போலீஸ்) அதிகாரியாக நடித்துள்ளார் அஞ்சலி. சாக்ஷி எனும் வாய்பேச முடியாத ஓவியராக நடித்துள்ளார் அனுஷ்கா. மாதவன் இதில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நிசப்தம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அனுஷ்கா மட்டுமே உள்ளார்.

இளமையான தோற்றம்
ஒல்லியான தேகத்தில், சூப்பரான ஹேர்ஸ்டைலில் அழகாக காட்சியளிக்கிறார் அவர். இந்த போஸ்டரைப் பார்த்து அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிசப்தம் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் இப்படி ஒரு அனுஷ்காவை அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

இஞ்சி இடுப்பழகி
சமீபத்தில் அனுஷ்காவின் குண்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆகிடாங்களே என சொல்லும் அளவுக்கு அவரது தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூட்டிய எடையைக் குறைக்க முடியாமல் தொடர்ந்து அனுஷ்கா கஷ்டப்பட்டு வருகிறார் எனக் கூறப்பட்டது.

மிகப் பெரிய சந்தேகம்
இந்நிலையில் நிசப்தம் போஸ்டரில் அனுஷ்கா ஸ்லிம்மாக காட்சியளிப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. ஒருவேளை பாகுபலி இரண்டாம் பாகம் போல், கிராபிக்ஸ் செய்து உடல் எடை குறைக்கப்பட்டது போல் காட்டி இருக்கிறார்களா இல்லை நிஜமாகவே அனுஷ்கா மெலிந்து விட்டாரா என்பது தான் அவர்களது மிகப்பெரிய சந்தேகம்.


Click it and Unblock the Notifications











