உஷ்.. சைலன்ஸ்.. நியூமராலஜியா.. சத்தமே இல்லாமல் பெயரை மாற்றிய படக்குழு.. புது டிரைலர் வேற!

சென்னை: அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகி உள்ள சைலன்ஸ் படத்தின் புதிய டிரைலர் வெளியாகி உள்ளது.

நிசப்தம் எனும் தலைப்பில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் தேதி, ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போன நிலையில், தற்போது படத்தின் தலைப்பும் மாறியுள்ளது.

இயக்குநர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வருகிறது.

பேய் படமா

பேய் படமா

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சைலன்ஸ் திரைப்படம் பேய் படம் போல காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால், இது பேய் படமா அல்லது, பாகமதி போல ஹாரர் த்ரில்லர் படமா என்பது ரிலீசுக்கு பிறகு தான் தெரியவரும்.

புது டிரைலர்

நிசப்தம் என்ற பெயரில் உருவான சைலன்ஸ் திரைப்படத்தின் பெயரை தற்போது படக்குழு மாற்றியுள்ளனர். ஜனவரி 30ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம், கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது. தற்போது, வரும் ஏப்ரல் 2ம் தேதி ரிலீசாகும் என்ற அறிவிப்புடன் புதிய டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

தியேட்டர் கிடைக்கல

தியேட்டர் கிடைக்கல

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி மற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு தியேட்டர்கள் கிடைக்காததே காரணம் என தகவல்கள் வெளியாகின. மேலும், முதல் பாதி முழுவதும் சைலன்ஸாகவே இருக்குமாம்.

டிரைலர் எப்படி இருக்கு?

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அனுஷ்காவின் சைலன்ஸ் படத்தின் டிரைலர் மிரட்டுகிறது. அட்டகாசமான எடிட்டிங் மற்றும், பவர்ஃபுல்லான பின்னணி இசை பேய் படத்துக்கு உண்டான பயத்தை கொடுக்கிறது. பாகமதி படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில், வாய் பேச முடியாத ஊமையாக அனுஷ்கா நடித்துள்ளார்.

முன்னோடி

அனுஷ்காவின் அருந்ததி படத்திற்கு பிறகு தான் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் அதிகரித்தன. நயன்தாரா, சமந்தா, தமன்னா, டாப்ஸி உள்ளிட்ட நடிகைகளுக்கு அனுஷ்கா தான் முன்னோடி என்று ரசிகர்கள் #AnushkaShetty மற்றும் #SilenceTrailer என்ற ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X