நாமே லாக்டவுன் அமைத்து கொள்வோம்...ரசிகர்களுக்கு அனுஷ்கா வேண்டுகோள்

சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, போராடி வரும் நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோலிவுட் பிரபலங்கள் பலர் மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், சானிடைசர் பயன்படுத்துங்கள் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த இக்கட்டான சூழலில் பாசிட்டிவான வார்த்தைகளை கூறி உள்ளார்.

பாசிடிவ்வாக இருங்கள்

பாசிடிவ்வாக இருங்கள்

மக்கள் பாசிடிவ்வாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அனுஷ்கா, தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டாளும் தொடர்ந்து பரவி வருகிறது. எல்லோரும் அவர்களால் முடிந்ததை செய்து வருகின்றனர். இழப்புக்களை ஈடு செய்ய முடியாது.

ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்

ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்

இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். வழிகாட்டு முறைகளை தயவு செய்து கடைபிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். நமக்கு நாமே லாக்டவுனை அமல்படுத்திக் கொள்வோம். இதை உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் சொல்லுங்கள். தொடர்ந்து அனைவருடனும் தொடர்பில் இருங்கள். இந்த உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என யாருக்கும் தெரியவில்லை.

பாசிடிவ் எனர்ஜி கொடுங்கள்

பாசிடிவ் எனர்ஜி கொடுங்கள்

சில மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள். ஒவ்வொரு நாளையும் பாசிடிவ்வாக அணுகுங்கள். பாசிடிவ்வாக இருந்து சுற்றியுள்ள அனைவருக்கும் பாசிடிவ் எனர்ஜியை பகிருங்கள். பிரார்த்தனையாக இருந்தாலும் சிறிய அளவிலாவது உதவுங்கள். இந்த சமயத்தில் நான் என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

மனிதகுல பலத்தை காட்டனும்

மனிதகுல பலத்தை காட்டனும்

எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். நெகடிவ்வான எண்ணங்களை வர விடாதீர்கள். நாம் ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும். இதை பிரார்த்தனையால் பெற முடியும். அன்பு மற்றும் பிரார்த்தனைகள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X