க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்.. துபாய் தொழிலதிபருடன் நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?
சென்னை: நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.
39 வயதாகும் நடிகை அனுஷ்கா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில், தனது திருமணத்துக்கு அனுஷ்கா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இளம் தொழிலதிபருடன் விரைவில் அனுஷ்காவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

39 வயது
தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கி வருகிறார் நடிகை அனுஷ்கா. 1981ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்த நடிகை அனுஷ்காவுக்கு 39 வயதாகிறது. ஆனால், இன்னமும் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியாவது நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைத்தாக வேண்டும் என அவரது பெற்றோர்கள் மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாஸுடன் காதல்
பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் காட்டுத் தீ போல பரவின. இதை அறிந்த இருவருமே அது முற்றிலும் வதந்தி என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

துபாய் தொழிலதிபர்
இந்நிலையில், மீண்டும் நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் நடிகை அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும், விரைவில் எளிமையான முறையில் திருமணமும் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வயசு குறைவு
நடிகை அனுஷ்காவின் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், நடிகை அனுஷ்காவை விட மணமகனின் வயது மிகவும் குறைவு என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பாக நடிகை அனுஷ்கா தரப்பில் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

க்ரீன் சிக்னல்
ஆனால், தனது திருமணத்துக்கு பெற்றோர்களிடம் நடிகை அனுஷ்கா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகை அனுஷ்காவின் திருமணம் நடைபெறும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் என்கிற தகவல் வெளியானதும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











