முதல்ல நல்ல பையன் கிடைக்கட்டும்..! - அனுஷ்கா

By Shankar

சென்னை: எனக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை. காரணம் முதலில் நல்ல பையன் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

அனுஷ்கா நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் 'பாகுமதி' படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, சமீபத்தில் அவர் சென்னை வந்தார்.

பாகுமதி

பாகுமதி

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாகுபலி படத்துக்கும், பாகுமதி படத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது, வேறு கதை. இது, வேறு கதை. இது, ஒரு திகில் படம். இதில், ‘சஞ்சனா' என்ற ‘ஐ.ஏ.எஸ்.' அதிகாரியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

சண்டை இல்லை

சண்டை இல்லை

இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான். உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்து இருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு ‘பாகுமதி' படம் மிகவும் பிடிக்கும். படத்தில், எனக்கு சண்டை காட்சிகள் கிடையாது.

எடைக் குறைப்பு

எடைக் குறைப்பு

‘இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக நான் என் உடல் எடையை கூட்டி, நடித்தேன். உடம்பு குண்டான பின், அதை குறைக்க முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எடையை குறைத்து வருகிறேன். ‘யோகா' மூலம் ஓரளவு என் உடல் எடை குறைந்து இருக்கிறது.

ரஜினிதான் பிடிக்கும்

ரஜினிதான் பிடிக்கும்

தமிழ் பட உலகில் எனக்கு பிடித்த நடிகர், ரஜினிகாந்த். இப்படி சொல்வதன் மூலம் மற்ற நடிகர்களை எனக்கு பிடிக்காது என்று அர்த்தம் அல்ல. எல்லா கதாநாயகர்களும் நண்பர்கள்தான்.

திருமணம் எப்போ?

திருமணம் எப்போ?

எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால், உடனே திருமணம்தான். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்கள் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்வேன்.

பிரபாஸ் அல்ல

பிரபாஸ் அல்ல

எனக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பேசப்படுவதில், உண்மை இல்லை. நிச்சயமாக, அவருடன் எனக்கு திருமணம் இல்லை. பிரபாஸ், எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X