Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
முதுகுவலியால் அவதிப்படும் இஞ்சி இடுப்பழகி... கேரளாவில் சிகிச்சை!
Recommended Video
திருவனந்தபுரம் : பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் 'பாக்மதி'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை.
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையை அதிகமாக்கிய அனுஷ்காவால் எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சி என முயற்சித்துப் பார்த்தும் 'பாகுபலி 2' படத்தில் நடிக்கும்போதும் குண்டாகவே இருந்தார்.
உடல் எடையை குறைக்க முழுமூச்சில் உடற்பயிற்சியில் இறங்கி ஜிம்மே கதியாகக் கிடந்தார். அதன் பலனாக தற்போது ஸ்லிம்மாகி உள்ளார். அனுஷ்கா ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே அனுஷ்கா, நீண்டகாலமாக முதுகு வலியினால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதே சிறந்த வழி என்று பலர் சொன்ன அட்வைஸை ஏற்று, இப்போது கேரளாவில் முகாமிட்டு முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.