“அய்யோ பாவம் ஏழைங்கபோல.. போட்டுக்க டிரஸ்கூட இல்ல..” அனுஷ்கா-கோஹ்லி செல்பியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
வைரலாகியுள்ள அனுஷ்கா-கோஹ்லியின் ஹாட் செல்பியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மும்பை: கடற்கரையில் தனது மனைவி அனுஷ்காவுடன் கிரிக்கெட் வீரர் கோஹ்லி எடுத்துக் கொண்ட புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
சினிமாவைப் போலவே நிஜத்திலும் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவின் காதல். இருவரும் உருகி உருகி காதலித்தது, பின்னர் டூ விட்டுக் கொண்டது என அவர்களது காதல் கதை உலகளவில் பிரபலம்.
பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் காதலை வெளிப்படுத்தும் ஜோடிகளில் ஒன்று தான் கோஹ்லி, அனுஷ்கா ஜோடி. காதலிக்கும் போது மட்டுமின்றி, தற்போது திருமணத்திற்குப் பிறகும் அதே காதலுடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட தங்களது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஹாட் செல்பி
இவர்களது காதலுக்கு ரசிகர்கள் அதிகம். எனவே, அவர்கள் போடும் ஒவ்வொரு படத்திற்கும் லைக்ஸ் அள்ளும். இதனை நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ள அவர்களும் வஞ்சகம் இல்லாமல் அவ்வப்போது ஹாட் செல்பிக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பீச் செல்பி
அந்தவகையில் தற்போது பீச் ஒன்றில் எடுத்துக் கொண்ட வித்தியாசமான ஹாட் செல்பி ஒன்றை அனுஷ்கா - கோஹ்லி தம்பதி வெளியிட்டுள்ளனர். சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அந்த புகைப்படத்தை லைக்ஸ் செய்துள்ளனர். இதனால் அந்தப் புகைப்படம் வைரலாகி விட்டது.

கலாய் மீம்ஸ்
வழக்கம் போல், மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களுக்கு புதிய டெம்ப்ளேட் கிடைத்து விட்டது என இந்தப் புகைபடத்தை வைத்து புதிய மீம்ஸ்களை உருவாக்கத் தொடங்கி விட்டனர். இந்தப் புகைப்படத்தில் கோஹ்லி மேலாடை இல்லாமல் இருக்கிறார். அவர் அப்படி இருப்பதால் தான் டெக்ஸ்டைல் வர்த்தகமே பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக ஒரு நெட்டிசன் கலாய்த்துள்ளார்.
இது அல்டிமேட்
அய்யோ பாவம்.. ரொம்ப ஏழைங்க போல அதான் போடக் கூட அவங்ககிட்ட டிரெஸ் இல்லை' என மைடியர் மார்த்தாண்டன் பட கவுண்டமணி ரேஞ்சுக்கு, கோஹ்லி மற்றும் அனுஷ்காவைக் கிண்டலடித்துள்ளார் இவர். இதற்கு முன்னர் அனுஷ்காவும், கோஹ்லியும் எடுத்துக் கொண்ட பல ஜோடி செல்பிக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











