ரூ 5 கோடி தங்க நகைகளுடன் ஜொலிக்கும் ருத்ரமா தேவி!
ருத்ரமாதேவி படத்துக்காக நடிகை அனுஷ்காவுக்கு ரூ 5 கோடி மதிப்பில் பிரத்தியேகமாக தங்க நகைகள் செய்துள்ளனர் அப்படத்தின் தயாரிப்பாளர்கள்.
ருத்ரமாதேவி என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. தமிழிலும் இதே பெயரில் இப்படம் வருகிறது.
இதில் ருத்ரமாதேவி ராணியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

பயிற்சிகள்
சண்டைக் காட்சிகள், போர்க்கள காட்சிகள் நிறைந்த இந்தப் படத்துக்காக கத்திச் சண்டை, குதிரை ஏற்றம் என பல பயிற்சிகளை எடுத்தார் அனுஷ்கா. பல புதிய படங்களையும் கூட தவிர்த்தார்.

தங்க நகைகள்
ராணி கேரக்டர் என்பதால் அனுஷ்காவுக்கு பிரத்யேகமாக தங்கத்தில் நகைகள் வடிவமைத்துள்ளனர். வழக்கம்போல 'சினிமா நகைகளை' அணிவிக்காமல் ரூ.5 கோடிக்கு நிஜ தங்க நகைகளையே வாங்கியுள்ளனர்.
இந்தப் படத்தில் அனுஷ்கா அணிந்துள்ள அவ்வளவு நகைகள், கிரீடங்கள் அனைத்துமே தங்கத்தாலானவை என்கிறார்கள்.

குணசேகர்
இந்த படத்தில் அனுஷ்காவுடன் ராணா உள்பட முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். குணசேகர் இயக்குகிறார்.
ருத்ரமாதேவி படம் தன் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமையும் என நம்புகிறார் அனுஷ்கா.

இளையராஜா
பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு இசைஞானி இளையராஜாவின் இசையாகும்.


Click it and Unblock the Notifications











