Miss Shetty Mr Polishetty Trailer - அனுஷ்காவின் செகண்ட் இன்னிங்ஸ்.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ட்ரெய்லர்

ஹைதராபாத்: Miss Shetty Mr Polishetty Trailer (மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ட்ரெய்லர்) அனுஷ்கா நடித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

Anushkas Miss Shetty Mr Polishetty Trailer is Out Now

மெர்சல் செய்த பாகுபலி: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

குறைந்த பட வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

Anushkas Miss Shetty Mr Polishetty Trailer is Out Now

அனுஷ்காவின் செகண்ட் இன்னிங்ஸ்: அனுஷ்கா திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சமையல் கலைஞராக நடித்திருக்கிறார் அனுஷ்கா. ராதா இசையமைப்பில், மகேஷ் பாபு என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து சமீபத்தில் முடிந்தந்து.

ட்ரெய்லர்: படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. காதலும், காமெடியும் கலந்த படமாக இது உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிகிறது. அதுமட்டுமின்றி படத்தில் ஹீரோவுடன் அனுஷ்காவுக்கு அதிக வயது என்பதும் உறுதியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா இரண்டாவது இன்னிங்ஸில் கண்டிப்பாக கலக்குவார் என்று ஆரூடம் கூறிவருகின்றனர். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X