Anushka - ஷாருக்கானுடன் மோதப்போகும் அனுஷ்கா.. தாக்குப்பிடிப்பாரா தேவசேனா

சென்னை: Anushka (அனுஷ்கா) அனுஷ்கா நடித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியான சூப்பர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர். முதல் படத்தில் அவரது நடிப்பையும், அழகையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் அவருக்கு நல்லபடியான ரெஸ்பான்ஸ் கொடுத்து வரவேற்றது. இதனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தன. தமிழில் இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனாலும் அவரது கரியரில் ஒரு திருப்புமுனை ஏற்படாமலேயே இருந்தது.

Anushkas Ms Shetty Mr Polishetty Movie Released on September 7

அருந்ததி: இப்படிப்பட்ட சூழலில் வெளியானது அருந்ததி. பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

மெர்சல் செய்த பாகுபலி: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தொடர்ந்து அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக அவருக்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பு இல்லையென்றாலும் இரண்டாவது பாகத்தில் அனுஷ்காவுக்கு பெரும் ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவர் நடிப்பில் அசத்தினார். படமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டானதால் அனுஷ்காவும் மிக பிரபலமானார்.

குறைந்த பட வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

Anushkas Ms Shetty Mr Polishetty Movie Released on September 7

அனுஷ்காவின் செகண்ட் இன்னிங்ஸ்: அனுஷ்கா திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சமையல் கலைஞராக நடித்திருக்கிறார் அனுஷ்கா. ராதா இசையமைப்பில், மகேஷ் பாபு என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து சமீபத்தில் முடிந்தந்து.

எப்போது ரிலீஸ்?: படத்திலிருந்து சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி படமானது செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அன்றைய தினம்தான் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் பான் இந்தியா படமாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஷாருக்கானுக்கு முன்பு அனுஷ்கா தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X