நிம்மதியே போச்சு.. விசாரணைக்கு போனாலே நான் குற்றவாளியா..? கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை!
பெங்களூரு: போலீஸ் விசாரணைக்கு சென்றதால் நான் குற்றவாளி இல்லை என்று நடிகை அனுஸ்ரீ, கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கன்னட சினிமாவில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகிணி திவேதி
இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை ஆண்ட்ரிதா ராய், அவர் கணவர் நடிகர் திகாந்த் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

நடிகை அனுஸ்ரீ
இதற்கிடையில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இந்தி நடிகர் கிஷோர் அமன் ஷெட்டியை மங்களூரு போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகையும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அனுஸ்ரீக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதைப் பொருள்
இதையடுத்து கடந்த மாதம் நடிகை அனுஸ்ரீக்கு சம்மன் அனுப்பிய மங்களூரு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இது பற்றி மீடியாவில் செய்திகள் பரபரப்பாக வெளியாயின.

கண்ணீர் மல்க
இந்த விவகாரம் தொடர்பாக, நடிகை அனுஸ்ரீ தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் மல்க அவர் கூறியிருப்பதாவது: போதைப்பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. செப்டம்பர் மாதம் 24-ஆ தேதி எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

தவறு செய்யவில்லை
போலீஸ் விசாரணைக்கு சென்று அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டேன். விசாரணைக்கு சென்றதால் மட்டுமே நான் குற்றவாளி ஆகிவிட முடியாது. நான் குற்றவாளியும் இல்லை. இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், விசாரணைக்கு சென்றதால் என்னை, குற்றவாளியாகவே கருதுகின்றனர்.
Recommended Video

எதிரான கருத்துக்கள்
சோசியல் மீடியாவில் எனக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. தவறான, அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகின்றன. இதனால் எங்கள் குடும்பத்தில் நிம்மதியை இழந்துவிட்டோம். தயவு செய்து பிறருக்கு மன வேதனையை கொடுக்காதீர்கள். இவ்வாறு அவர் கண்ணிர் விட்டபடி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











