மாஸ்க் அணியாமல் மார்க்கெட்டில் ஃபோட்டோஷுட்...சர்ச்சையால் பதிவை நீக்கிய நடிகை
பாலக்காடு : 2012 ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த டைமண்ட் நெக்லஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுஸ்ரீ. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடியாக நடித்தவர் அனுஸ்ரீ.
2019 ம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக அழகிய ஃபோட்டோஷுட் நடத்திய படங்களை வெளியிட்டு, பட வாய்ப்புக்களை தேடி வருகிறார் அனுஸ்ரீ.

மாஸ்க் அணியாத அனுஸ்ரீ
அப்படி அடர் பச்சை நிற புடவையில், கோழிக்கோட்டில் உள்ள பாளையம் மார்க்கெட்டில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்று காலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். பரபரப்பாக இயங்கிய மார்க்கெட்டில், சுற்றி இருப்பவர்கள் மாஸ்க் அணிந்திருக்க அனுஸ்ரீ மட்டும் மாஸ்க் அணியாமல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்
இதனைக் கண்ட இணையதளவாசிகள் பலர், இந்த ஃபோட்டோவில் நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள். ஆனால் பலர் கூடி இருக்கும் மார்க்கெட்டில் மாஸ்க் இல்லாமல் இருக்கிறீர்களே. சினிமா பிரபலம் என்பதால் உங்களுக்கு பொறுப்பு கிடையாதா. உங்களை பின் தொடர்பவர்களையும் இது போல் செய்ய தூண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.

சமாளிக்க முயன்ற அனுஸ்ரீ
அதற்கு விளக்கம் அளித்துள்ள அனுஸ்ரீ, இது நீண்ட நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஃபோட்டோ. கோழிக்கோட்டின் பாளையம் மார்க்கெட்டில் இருந்து பாரம்பரியம் மிக்க கைத்தறி ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்த எடுக்கப்பட்ட ஃபோட்டோ இது என சமாளித்தார்.
இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்
இருந்தும் நெட்டிசன்கள் அனுஸ்ரீயை விடுவதாக இல்லை. தொடர்ந்து இவரின் செயலை திட்டி தீர்த்தனர். பலர் அடுக்கடுக்காக பல கேள்விகளையும் பதிவிட்டனர். இதனால் வேறு வழி இல்லாமல் தான் காலையில் பதிவிட்ட மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் அனுஸ்ரீ.


Click it and Unblock the Notifications











