Don't Miss!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இணையத்தில் கசிந்த அனுயாவின் ஆபாசப்படம்... நீக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
Recommended Video
சென்னை: பிரபல நடிகை அனுயாவின் ஆபாசப் படம் என ஒன்றை ட்விட்டரில் பரவவிட்டுள்ளனர். இதனை நீக்கக் கோரி அனுயா சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளார்.
நடிகைகளின் ஆபாச, நிர்வாணப் படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்புவது வழக்கம். இவற்றில் சில உண்மையாக இருக்கும். பல மார்ப்பிங் செய்யப்பட்டவையாக இருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாசப் படங்கள் வெளியாகி, பின் நீக்கப்பட்டன.
சிவா மனசுல சக்தி, நண்பன் உள்ளிட்ட தமிழ் படங்கள், மற்றும் சமீபத்தில் பிக்பாஸில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது.
இந்தப் படத்தை டிவிட்டரில் இருந்து நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து நடிகை அனுயா பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில், "சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறிஉள்ளார்.