அப்பாக்கூட செய்யுற காரியமா இது.. தீயாய் பரவும் போட்டோ.. நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை ஒருவர் தனது அப்பாவுடன் சேர்ந்து கையில் சரக்குடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
இந்தி சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை அனுயா. இவர் தமிழில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

பிக்பாஸ் முதல் சீசன்
அதனை தொடர்ந்து, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், விஜய் ஆண்டனியின் நான் ஆகிய படங்களில் நடித்தார். பெங்காலி மொழியிலும் நடித்திருக்கிறார் அனுயா. நல்ல நடிப்பு திறமை இருந்த போதும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அடிக்கடி கிளாமர் போட்டோஸ்
ஆனால் 7 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் வெளியேறினார். அதன் பிறகு பெரிதாக எந்த படத்திலும் நடிகை அனுயாவை காண முடியவில்லை. அதேநேரத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் அனுயா. அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு கிக்கேற்றி வருகிறார் அனுயா.

கையில் கிளாஸ்
இந்நிலையில் நடிகை அனுயா தனது தந்தையுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அவர் தந்தையும் கையில் சரக்குடன் இருக்கிறார். அனுயாவும் கையில் கிளாஸுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

என்னுடைய ஆக்ஸிஜன்
இந்த பிரபஞ்சத்திலேயே தனது தந்தைதான் மிகவும் கூலான நபர் என்றும் அவர்தான் தன்னுடைய ஆக்ஸிஜன் என்றும் அனுயா குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அப்பாதான் தனது நம்முடைய முதல் ஃபிரன்ட், ரோல் மாடல். நீங்கள் உங்களுடைய விலை மதிக்க முடியாத தருணத்தை கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
கொஞ்சம் ஓவர்தான்
இன்னும் சிலர் அது என்ன வோட்காவா என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், அப்பாக்கூட பீர் குடிக்கிறதெல்லாம் பெரிய விஷயம் என தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் என்ன இருந்தாலும் அப்பாக்கூட சேர்ந்து சரக்கு அடிக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றும் சிலர் வறுத்தெடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











