எனக்கு எதுவும் நடக்கலாம்.. அதற்கு அவர்கள்தான் காரணம்.. பிரஸ் மீட்டில் சீரியல் நடிகை பரபரப்பு புகார்!

Recommended Video

Jayasree Eswar blast on husband Eswar |Eswar Arrested

சென்னை: எனக்கு மிரட்டல்கள் வருகின்றன என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தன்னை கணவர் ஈஸ்வரும் அவரது அம்மாவும் அடித்து துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினார். தனது கணவர் ஈஸ்வர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமைப் படுத்துவதாகவும் கூறினார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வரும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த ஈஸ்வர் தனக்கும் மகாலட்சுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ தன் மீது அபாண்டமாக குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஜெயஸ்ரீ மறுப்பு

ஜெயஸ்ரீ மறுப்பு

மேலும் ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும்தான் தொடர்பு உள்ளது என்றும் குற்றம்சாட்டினார். ஈஸ்வரின் குற்றச்சாட்டை மறுத்தார் ஜெயஸ்ரீ.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து மகாலட்சுமியின் கணவர் அனில், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ, ஈஸ்வர் என நான்கு பேரும் மாறி மாறி செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மிரட்டல்கள்

மிரட்டல்கள்

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பிரஸ் மீட் நடத்தக்கூடாது என தனக்கு மகாலட்சுமி தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

இரவில் தூங்கவிடாமல் காலிங் பெல்லை அடித்துவிட்டு செல்கின்றனர். யார் இதுபோன்று செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதற்காக வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளேன். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.

எதுவும் நடக்கலாம்

எதுவும் நடக்கலாம்

எனக்கு எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி நடந்தால் அதற்கு ஈஸ்வரும் அவரது அம்மாவும் நடிகை மகாலட்சுமியும்தான் காரணம்.

பிளாம் அசோசியேஷன்

பிளாம் அசோசியேஷன்

இதற்கு முன் பிளாட்ஸில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது பிளாட் அசோசியேஷனில் என் வீட்டுக்கு யார் வந்தாலும் ஐடி மற்றும் போன் நம்பரை கேட்டு வைத்துக்கொள்கின்றனர். யார் என்னை பார்க்க வந்தாலும் அத்தனை கேள்வி கேட்கின்றனர்.

தொல்லை கொடுக்கிறார்கள்

தொல்லை கொடுக்கிறார்கள்

நான் வெளியே போய்விட்டு வந்தாலும் லேட்டாக வருவதாக கூறி தொல்லை கொடுக்கிறார்கள். இதற்கு காரணம் ஈஸ்வரின் குடும்பத்தினர்தான். அவர்கள் வெளியே இருந்து கொண்டு ஆப்ரேட் செய்கிறார்கள். இதனால் பிளாட்ஸில் என்னை இருக்கவிடாமல் விரட்டப் பார்க்கிறார்கள்.

நான்தான் பெற்று தந்தேன்

நான்தான் பெற்று தந்தேன்

ஈஸ்வருக்கு தொலைக்காட்சி வாய்ப்புகள் வாங்கி கொடுத்தது நான்தான். அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த எனக்கு, எனக்காக வாய்ப்பு பெற தெரியாதா?
சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. யூனிவர்சிட்டியில் விரிவுரையாளராக வாய்ப்புகள் வந்தன.

குடும்ப பின்னணி

குடும்ப பின்னணி

ஆனால் ஈஸ்வரும் அவரது குடும்பத்தினரும் கூறியதால்தான் வம்சம் சீரியலுக்கு பிறகு நான் நடிக்கவில்லை. எனக்கு வேலை கிடைக்கவில்லை என ஈஸ்வர் சொல்கிறார். இதுவரை 2000 ஸ்டேஜ் புரோகிராம் செய்திருக்கிறேன். எம்ஜிஆர் எங்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் எனறு போட்டோவை காட்டினார் ஜெயஸ்ரீ.

தயாராக உள்ளேன்

தயாராக உள்ளேன்

எனது தாயாரும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதனால் எனக்கு வாய்ப்பில்லை என்று ஈஸ்வர் கூறுவது பொய்யான ஒன்று. ஈஸ்வருடன் சேர்ந்து வாழ நான் இப்போதும் தயாராகதான் உள்ளேன். அவர்தான் விவாகரத்து கேட்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X