அண்ணனை தொடர்ந்து தம்பியுடன் இணைந்து நடிக்கும் அபர்ணா பாலமுரளி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் புதிய படம் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
சினிமா தொடர்பான பல்வேறு சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் கேரள முதல்வர் பினராய் விஜயனின் செயல் திட்டங்கள் குறித்து உருவாகும் படத்தில் நடிக்கும் மம்மூட்டி மற்றும் அந்தப் படம் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படுவது குறித்தும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் கமல் நடிப்பில் வெளியான பேசும் படத்தை போல் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் காந்தி டாக்ஸ் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் இயக்குநர் சுந்தர் சி கூறிய கதையில் விஜய் நடிக்க மறுத்ததையும் பின்னர் அதில் விஷால் நடித்து ஆக்ஷன் என்ற பெயரில் வெளியான தகவலையும் கூறியுள்ளார் பிகே.
சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி அடுத்து கார்த்தியுடன் ஜோடி சேர உள்ளார். அந்த படத்தை முத்தையா இயக்க உள்ளார் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் வீரப்பன் கஜானா படம் குறித்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.
8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதய நோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்


Click it and Unblock the Notifications











