அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி... கலக்கலான அப்டேட்!

சென்னை : நடிகர் அசோக்செல்வன் இப்பொழுது ஹாஸ்டல் என்ற படத்தில் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்து வருகிறார்.

சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து தமிழ் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துள்ளவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வந்த வான் படத்தின் இயக்குனர் ஆர் கார்த்திக் இயக்கும் புதிய திரைப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க ஹீரோயினியாக அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா மற்றும் பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா என மூன்று கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர் . கோபி சுந்தர் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

பொம்மி கதாபாத்திரத்தில்

பொம்மி கதாபாத்திரத்தில்

சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப்போற்று சென்ற ஆண்டு வெளியாகி ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும் சூழ்நிலை காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்தியா முழுவதும் மிகப்பெரிய கவனத்தை பெற்ற இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி

சூரரைப் போற்று வெளியான சில மாதங்களாகவே தமிழ் ரசிகர்களால் பொம்மி மாதிரி ஒரு பொண்ணு தான் எங்களுக்கு வேண்டும் என சொல்லுமளவிற்கு அந்த கதாபாத்திரத்தை அபர்ணா பாலமுரளி மிக நேர்த்தியாக வெளிக் கொண்டு வந்திருப்பார்.

மலையாள ரீமேக்கில்

மலையாள ரீமேக்கில்

இதுவரை ஹீரோவாக மட்டும் நடித்த அசோக் செல்வன் முதல் முறையாக தயாரிப்பாளராகவும் மாறி ஓ மை கடவுளே என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து இருந்தார் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் தீனி படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார். இப்பொழுது பிரபல மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு ஹாஸ்டல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கிறார்.

ஹீரோயினியாக அபர்ணா

ஹீரோயினியாக அபர்ணா

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வந்த வான் படத்தின் இயக்குனர் ஆர் கார்த்திக் இயக்கும் புதிய திரைப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க ஹீரோயினியாக அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா மற்றும் பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா என மூன்று கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர். viacom18 ஸ்டூடியோ தயாரிக்கின்றது .கோபி சுந்தர் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X