Don't Miss!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்.. டிரெண்டாகும் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்!
திருவனந்தபுரம்: சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளியை கல்லூரி மாணவர் ஒருவர் தகாத முறையில் தொட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி உள்ள தங்கம் படத்தை ப்ரோமோட் செய்ய சமீபத்தில் கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரிக்கு படக்குழுவினர் சென்றனர்.
விழா மேடையிலேயே நடிகைக்கு இப்படியொரு தர்ம சங்கடம் நேர்ந்த நிலையில், அந்த கல்லூரியையும் கல்லூரி மாணவரையும் அபர்ணா பாலமுரளியின் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
பிக்
பாஸ்
நிகழ்ச்சியில்
அரசியல்
கலக்கக்
கூடாது..
கமலுக்கு
கோரிக்கை
வைத்த
வனிதா
விஜயகுமார்!

சூரரைப் போற்று பொம்மி
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படம் மூலம் கடந்த 2015ல் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமான இவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப் போற்று படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியுடன் வீட்ல விசேஷம் மற்றும் அசோக் செல்வன் உடன் நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

தங்கம்
சுந்தரி கார்டன்ஸ், இனி உதாரம், காப்பா உள்ளிட்ட மலையாள படங்களிலும் கடந்த ஆண்டு நடித்து கலக்கி இருந்தார் அபர்ணா பாலமுரளி. விரைவில் அவர் நடித்துள்ள மற்றொரு மலையாள திரைப்படமான தங்கம் வெளியாகிறது. சாஹித் அராஃபத் இயக்கத்தில் வினீத் ஸ்ரீனிவாசன், பிஜு மேனன் உடன் இந்த படத்தில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.

கல்லூரி விழா
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவில் தங்கம் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை ப்ரோமோட் செய்தனர். அப்போது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அத்துமீறிய மாணவர்
நடிகை அபர்ணா பாலமுரளியை வரவேற்கும் விதமாக மேடையில் ஏறிய அந்த மாணவர் நடிகையின் அனுமதி இல்லாமல் திடீரென அவரது தோளில் கை போட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. அபர்ணா பாலமுரளிக்கு அது கொஞ்சம் கூட பிடிக்காத நிலையில், அங்கிருந்து விலகிச் சென்ற காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

ரசிகர்கள் கண்டனம்
எந்த பெண்ணாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் நெருங்கவோ தொடவோ கூடாது. இந்நிலையில், கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அந்த கல்லூரி மாணவர் எப்படி அத்துமீறி நடக்கலாம் என அந்த கல்லூரியையும் அந்த கல்லூரி மாணவரையும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.