Aparna Das: பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடிய டாடா ஹீரோயின்.. அந்த படையல பார்த்தீங்களா?
திருவனந்தபுரம்: ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், ஏப்ரல் 15ம் தேதியான இன்று மலையாள நடிகைகள் எல்லாம் விஷு எனப்படும் மலையாள புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், அமலா பால், சம்யுக்தா மேனன் என ஏகப்பட்ட மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் சக்கைப் போடு போட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் புதிதாக டாடா பட நடிகை அபர்ணா தாஸும் இணைந்துள்ளார். இந்நிலையில், பட்டாசு வெடித்து விஷு பண்டிகையை அவர் எப்படி கொண்டாடி உள்ளார் என்பதை இங்கே பார்ப்போம்..

பீஸ்ட் படத்தில் அறிமுகம்: மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இளம் நடிகை அபர்ணா தாஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இயக்குநர் நெல்சனின் நண்பரான கவின் படத்தில் இமிடியேட்டாக ஹீரோயினாக அப்கிரேட் ஆகி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளார்.
டாடா ஹீரோயின்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் கவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டாடா படத்தில் அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் இளம் ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார். சிந்து என்கிற கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்த அபர்ணா தாஸ் முறைக்கும் காட்சிகளில் எல்லாம் அந்த எமோஷனை நூறு சதவீதம் சரியாக கடத்தி இருந்தார்.

புத்தாண்டு கொண்டாடிய அபர்ணா தாஸ்: மலையாள நடிகையான அபர்ணா தாஸ் விஷு பண்டிகையை கொண்டாடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார். பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி செம சூப்பராக புத்தாண்டை கொண்டாடி உள்ளார் அபர்ணா தாஸ்.
படையல்: கிருஷ்ணர் சிலை அருகே பழங்களை வைத்து படையல் போட்டுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அபர்ணா தாஸ். பெரிய பலாப் பழத்தை பார்த்த ரசிகர்கள் நாக்கில் எச்சில் ஊறுது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கசவு சேலை கட்டி சாமி கும்பிடும் படி போட்டோ போடலையா என்றும் ரொம்ப சிம்பிளாக வீட்டில் எப்படி இயல்பாக இருப்பார்களோ அப்படி போஸ் கொடுப்பது தான் அபர்ணா தாஸின் தனித்துவமே என ரசிகர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தருவது போல கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
அடுத்த படம்: 2018ல் வெளியான ஞான் பிரகாசம் படத்தில் அறிமுகமான அபர்ணா தாஸ், மனோகரம், பீஸ்ட், பிரியன் ஒட்டத்திலானு, டாடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்ததாக மலையாளத்தில் உருவாகி வரும் சீக்ரெட் ஹோம் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் மீண்டும் கோலிவுட் பக்கம் தலையை காட்ட வேண்டும் அபர்ணா தாஸ் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்ற்னார்.


Click it and Unblock the Notifications











