Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!

திருவனந்தபுரம்: காலையில் எளிமையான முறையில் குருவாயூர் கோயிலில் திருமணத்தை நடத்தி முடித்த நடிகை அபர்ணா தாஸ் நேற்று இரவு சினிமா பிரபலங்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதற்காக அவர் தங்க நிற சேலையில் ரெடியாகும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போல் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் திருமணம் நேற்று கேரளாவில் உள்ள குருவாயூர் திருக்கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்த திருமணத்தில் பங்கேற்று இருந்தனர்.

Aparna Das getting ready for marriage reception video goes trending

சினிமா பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்ற கோலாகலமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அபர்ணா தாஸ் திருமணம்: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அடுத்ததாக கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் கடந்த ஆண்டு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். மலையாள நடிகையான அபர்ணா தாஸ் ஞான் பிரகாஷன் படத்தின் மூலம் நடிக்க வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வரும் அபர்ணா தா ஏப்ரல் 24-ஆம் தேதி குருவாயூர் கோயிலில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்போலை திருமணம் செய்துகொண்டார்.

Aparna Das getting ready for marriage reception video goes trending

திருமண புகைப்படங்கள்: அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் இருவரும் குருவாயூர் கோயிலில் துளசி மாலையை அணிந்து கொண்டு பாரம்பரிய முறையில் ரொம்பவே சிம்பிளாக தங்களது திருமணத்தை நடத்தினர். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். முன்னதாக ஹல்தி மற்றும் சங்கீத் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்க நிறப் புடவையில்: கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரிய மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி விருந்து கொடுத்துள்ளனர். அது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தங்க நிறப் புடவை அணிந்து கொண்டு அழகு பதுமையாக அபர்ணா தாஸ் இருக்கும் வீடியோ தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "நிலை பெயராது சிலை போலவே நின்று" என்கிற பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

மூஞ்சிலேயே தண்ணீ ஊத்திட்டாங்க: அபர்ணா தாஸின் சகோதரர் ஹல்தி கொண்டாட்டத்தின் போது அபர்ணா தாஸ் முகத்திலேயே தண்ணீரை ஊற்ற அவர் அழுது புலம்பும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. செம க்யூட்டாக திருமண நிகழ்ச்சியில் அபர்ணா தாஸ் நடந்துக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மணமக்களுக்கு வாழ்த்து: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் டீம் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் மற்றும் கவின் உள்ளிட்டோரும் அபர்ணா தாஸுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X