செம கூலா இருக்காரே.. கூலர்ஸ் அணிந்து அப்படியொரு போஸ் கொடுத்த தளபதி 65 நடிகை.. குவியுது லைக்ஸ்!
சென்னை: தளபதி 65 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இளம் மலையாள நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் இணைந்துள்ளார் நடிகை அபர்ணா தாஸ்.
சமீபத்தில் நடந்த பட பூஜையில் கலந்து கொண்ட அபர்ணா தாஸ் இன்ஸ்டாகிராம் பக்கம் தான் தற்போது அதிகப்படியான தளபதி ரசிகர்கள் வலம் வருகின்றனர்.

தளபதி 65
மலையாளத்தில் 2018ல் வெளியான நியான் பிரகாஷன் மற்றும் 2019ல் வெளியான மனோஹரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். தளபதி 65 படத்தின் பூஜையில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாத நிலையில், அபர்ணா தாஸ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை களைகட்டினார்.

பூஜா ஹெக்டேவுக்கு போட்டியாக
தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மேலும், தளபதி 65 படத்தில் மலையாள நடிகையான அபர்ணா தாஸும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. பூஜா ஹெக்டேவுக்கு போட்டியாக நடிகை அபர்ணா தாஸும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோக்களை போட்டு வருகிறார்.

குனிந்து பார்த்து
தளபதி 65 படத்தில் இணைந்துள்ள நடிகை அபர்ணா தாஸ் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோக்களாக பதிவிட்டு தமிழ் சினிமா ரசிகர்களையும் தளபதி ரசிகர்களையும் ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார். சமீபத்தில் குனிந்து பார்த்து அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்களும் அவரது அந்த போட்டோவிற்கு லைக் செய்துள்ளனர்.

செம கூலாக
இந்நிலையில், தற்போது கூலர்ஸ் அணிந்து கொண்டு கலரு சட்டையை மாட்டிக் கொண்டு செம கூலாக போஸ் கொடுத்துள்ள அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. எப்போது தளபதி 65 படத்தில் நடிக்கப் போறீங்க என்கிற கேள்வியை தளபதி ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











