அபர்னா தாஸுக்கு பீஸ்ட் படத்தில் என்ன ரோல் தெரியுமா ?...கேட்டா அசந்துடுவீங்க

சென்னை : கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் பல ஃபேமசான நடிகர்- நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லன்களாக செல்வராகவன், ஷைன் டாம் சாகோ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர யோகிபாபு, அபர்னா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வைரலான பீஸ்ட் மால் சீன்

வைரலான பீஸ்ட் மால் சீன்


ஷுட்டிங் ஸ்பாட்டில் மொபைல் போனுக்கு அனுமதி இல்லை என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளின் வீடியோக்கள், ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி, வைரலாகின. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், படக்குழுவினரின் பாதுகாப்பு குறைப்பாடு கவலை அடைய வைத்துள்ளது.

கதையை சொன்ன சிவகார்த்திகேயன்

கதையை சொன்ன சிவகார்த்திகேயன்

சில வாரங்களுக்கு முன் பீஸ்ட் படத்தின் கதை பற்றிய ரகசியத்தை ஓப்பனாக சொன்னார் சிவகார்த்திகேயன். இது தங்கம் கடத்தலை மையமாகக் கொண்ட கதை என சொன்னார். இதற்கே விஜய் ரசிகர்கள் பலர், என்ன சார் இப்படி ஒரே வார்த்தையில் படத்தின் சஸ்பென்சை உடைத்து விட்டீர்களே என கவலை தெரிவித்திருந்தனர்.

 சென்னையில் ஷுட்டிங்

சென்னையில் ஷுட்டிங்

தற்போது பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னை ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நடிக்கும் பல முக்கிய சீன்கள் இங்கு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்வக்கோளாறில், டிவி பிரபலமான சுஜாதா பாபு, பீஸ்ட் படத்தில் தானும் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறியதுடன், விஜய்க்கு அம்மா ரோலில் தான் நடிப்பதாக உண்மையை வெளியிட்டார்.

இந்த ரோலில் அபர்னா தாஸா

இந்த ரோலில் அபர்னா தாஸா

இதனால் வழக்கம் போல் யோகிபாபு, விஜய்யின் ஃபிரண்ட் ரோலில் தான் நடிப்பார் என யூகித்த ரசிகர்கள், மலையாள நடிகையான அழகு தேவதை அபர்னா தாஸ் அப்படியானால் என்ன ரோலில் நடிக்கிறார் என கேட்க துவங்கி விட்டனர். லேட்டஸ்ட் தகவலின் படி, பீஸ்ட் படத்தில் விஜய்யின் தங்கை ரோலில் தான் அபர்னா நடிக்கிறாராம்.

ஏக்கத்தில் ரசிகர்கள்

ஏக்கத்தில் ரசிகர்கள்

தற்போது சென்னை ஃபிலிம் சிட்டியில் நடக்கும் ஷுட்டிங்கில் அபர்னாவும் கலந்து கொண்டுள்ளார். விஜய் மற்றும் அபர்னா நடிக்கும் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றனவாம். இதனால் விஜய்க்கு இவ்வளவு அழகான தங்கையா என பலரும் ஏக்கத்துடன் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X