அந்த ஒரு போட்டோ மட்டுமல்ல.. என்கிட்ட இன்னும் நிறைய இருக்கு.. அபர்ணா தாஸ் வெளியிட்ட பீஸ்ட் பிக்ஸ்!

சென்னை: பீஸ்ட் டீமுக்கு நடிகர் விஜய் விருந்து வைத்த புகைப்படத்தை நேற்று நெல்சன் ஷேர் செய்து ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஏகப்பட்ட BTS (Behind The Scene) புகைப்படங்களை நடிகை அபர்ணா தாஸ் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

பீஸ்ட் சக்சஸ் பார்ட்டி... படக்குழுவுக்கு விஜய் வைத்த ட்ரீட்... நெகிழ்ந்த நெல்சன்!

பீஸ்ட் படத்தின் முதல் நாள் பூஜையின் போதே யாருப்பா அந்த மஞ்சள் கலரு சுடிதார் என அனைவரையும் தேட வைத்தவர் நடிகை அபர்ணா தாஸ்.

மலையாளத்தில் இரு படங்கள் பண்ண அவரை அப்படியே அலேக்காக கோலிவுட்டுக்கு கொண்டு வந்து விட்டார் இயக்குநர் நெல்சன்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

மலையாள திரையுலகின் இளம் நடிகையான அபர்ணா தாஸ் தமிழில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். மந்திரியின் மகளாகவும் ஐபிஎஸ் அதிகாரி ஆகும் கனவோடும் நடித்திருக்கும் அபர்ணா தாஸ் இரண்டாவது ஹீரோயின் மாதிரியே படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

விஜய் வீட்டு விருந்து

விஜய் வீட்டு விருந்து

இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து வைத்த புகைப்படத்தை ஷேர் செய்து, பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரிய நன்றியை கூறியிருந்தார். இந்நிலையில், உடனடியாக அபர்ணா தாஸ் தன்னிடம் இருந்த பிரத்யேக பீஸ்ட் பட ஷூட்டிங் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார்.

எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்

எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்

நடிகர் விஜய் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்த அபர்ணா தாஸ், தற்போது ஜாலியோ ஜிம்கானா ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் பீஸ்ட் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவுடன்

விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவுடன்

நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவுடன் ஜாலியோ ஜிம்கானா பாடல் ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து விஜய் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். செம க்யூட்டாக அழகா இருக்கீங்க என அபர்ணா தாஸை யாரும் கொஞ்சாமல், விஜய்யை ரசித்தே பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நெல்சன் உடன்

நெல்சன் உடன்

பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ள அபர்ணா தாஸ், திறமையான இயக்குநர் நீங்கள், எனக்கு இப்படியொரு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி எனக் கூறியுள்ளார். மேலும், ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் செட்டில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

கவின் படத்தில்

கவின் படத்தில்

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் புதிய படமான 'டாடா' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அபர்ணா தாஸ். கேரளாவில் இருந்து ஏகப்பட்ட நடிகைகள் இங்கே வந்து பெரிய ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில் அபர்ணா தாஸும் இடம்பெறுவாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X