கொஞ்சம் கூட கிளாமர் இல்லை.. ஒன்லி ஹோம்லி தான்.. ஒயிட் கலர் சுடிதாரில் கலக்கும் தளபதி 65 நாயகி!
சென்னை: தளபதி 65 படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகை அபர்ணா தாஸ் பக்கம் தான் இப்போ தமிழ் பசங்க அதிகமாக வட்டமிட ஆரம்பித்துள்ளார்களாம்.
அதற்கு ஏற்றார் போல தளபதி ரசிகர்களை மொத்தமாக கவரும் விதமாக க்யூட்டான போட்டோக்களை போட ஆரம்பித்துள்ளார் அபர்ணா தாஸ்.
தற்போது அவர் பதிவிட்டுள்ள வெள்ளை நிற சுடிதார் அணிந்து வெண்ணிலவாக நிற்கும் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

மலையாள
மாஸ்டர் படத்தில் மலையாள நடிகையான மாளவிகா மோகனன் நடித்த நிலையில், தளபதி 65 படத்தில் மீண்டும் ஒரு மலையாள நடிகையாக நடிகை அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். 2018ம் ஆண்டு வெளியான நியான் பிரகாசம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர், 2019ல் மனோகரம் எனும் படத்தில் நடித்திருந்தார்.

செம அழகு
மலையாள நடிகையான அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். ரொம்ப சிம்பிளாக இருக்கும் அபர்ணா தாஸ் ஒவ்வொரு புகைப்படத்திலும் கொள்ளை அழகை காட்டி ரசிகர்களை கொள்ளை கொண்டு வருகிறார்.

விஜய்க்கு ஜோடியா
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இணைந்துள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளாரா? அல்லது முக்கியமான கதாபாத்திரத்திலா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க உள்ள நிலையில், அபர்ணா தாஸுக்கு என்ன மாதிரியான ரோல் இருக்கும் என்றும் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

ஒயிட் கலரு சுடிதார்
இரண்டு லட்சத்திற்கும் குறைவான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களையே கொண்டுள்ள அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் இணைந்துள்ள நிலையில், கிடுகிடுவென தனது ஃபாலோயர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வெள்ளை நிற சுடிதார் அணிந்து அவர் செம க்யூட்டாக கொடுத்திருக்கும் போட்டோவுக்கு ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஒன்லி ஹோம்லி
நடிகை அபர்ணா தாஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூர் சென்றால், இருக்கும் அத்தனை போட்டோக்களும் செம அழகாகவும், ஹோம்லியாக மட்டுமே இருக்கிறது. கிளாமர் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடாமல் இருப்பதை பார்த்தாலே அதில் இவருக்கு நாட்டமில்லை என்று தெரிகிறது.

மே மாதம் தான்
தேர்தல் முடிந்த கையோடு நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளனர். நடிகை அபர்ணா தாஸ், பட பூஜையில் கலந்து கொண்ட நிலையில், அவரது ஷூட்டிங் வரும் மே மாதம் தான் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











