அந்தப் படத்தின் ஆடிஷனுக்கு சென்றபோது சூர்யாதான் ஹீரோ என்று தெரியாது.. இளம் ஹீரோயின் ஆச்சரியம்!

By

சென்னை: அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்றபோது அதில் சூர்யா ஹீரோ என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார், அந்த நடிகை.

Recommended Video

Soorarai Pottru- Mannurunda Lyrical video | Surya | G.V.Prakash | Sudha Kongara

பெங்களூரைச் சேர்ந்த ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

இதில் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, அவர் ஜோடியாக நடித்துள்ளார்.

மோகன்பாபு

மோகன்பாபு

'துரோகி', 'இறுதிச்சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

சிக்யாவுடன் இணைந்து

சிக்யாவுடன் இணைந்து

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

விமானத்தில் பாடல்

விமானத்தில் பாடல்

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, விமானத்தில் நடந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்திராத ஏழை மாணவர்கள் விமானத்தில் அழைத்துச்செய்யப்பட்டனர். இந்தப் படத்தை ஏப்ரல் இறுதி அல்லது மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டது.

சூர்யா ஜோடி

சூர்யா ஜோடி

இதனால் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆடிஷனில் கலந்து கொண்டபோது சூர்யா ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்பது தெரியாது என்று கூறியுள்ளார், நடிகை அபர்ணா பாலமுரளி. இவர், 8 தோட்டாக்கள், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மகிழ்ச்சிக்கு அளவில்லை

மகிழ்ச்சிக்கு அளவில்லை

அவர் கூறும்போது, இந்தப் படத்துக்கான ஆடிஷனுக்கு நான் சென்ற போது இதில் சூர்யா நடிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. சுதா கொங்கரா இயக்கும் படம் என்பதுமட்டும்தான் எனக்குத் தெரியும். பிறகு ஆடிஷனின் தேர்வாகி, சூர்யா நடிக்கும் படம் என்று தெரிந்ததும் நான் அடைந்த ஆச்சரியத்தும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. ஏனென்றால் 'காக்க காக்க' படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X